SJ Surya: தமிழ் சினிமாவின் செல்லப்பிள்ளையாகி இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அவர் நடித்த எல்லா படங்களுமே ஹிட் ரகம் தான். வில்லனையே ரசிக்க வைக்கும் அவருக்கு மார்க் ஆண்டனியில் நடிப்பு அரக்கன் என்ற பெயரே கொடுக்கப்பட்டு விட்டது.
தற்போது பிசியாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இப்படத்தினை கார்த்திக் சுப்புராஜ் இயக்க ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்து இருக்கிறார். படம் வரும் தீபாவளி தினத்தில் ரிலீஸாக இருக்கிறது.
இதையும் படிங்க: சரோஜாதேவியை கழட்டிவிட முடிவு செய்த எம்.ஜி.ஆர்!.. பின்னணியில் இருந்த காரணம் அதுதான்!…
அதுகுறித்து அவர் அளித்த சமீபத்திய பேட்டியில், நியூ படத்திற்கு பின்னர் என்னுடையே சினிமா கேரியரே பெரிய வீழ்ச்சியை சந்தித்தது. அதனை தொடர்ந்து இசை படத்தால் மீண்டும் வந்தேன். ஆனால் அது நியூ போல பெரிய ஹிட்டெல்லாம் இல்லை.
அடுத்து மான்ஸ்டர் படத்தில் தனியாக நடித்தேன். ஆனால் அது விமர்சனம் சரியாக இருந்ததாலும் பெரிய அளவில் ஓடவில்லை. அதனையடுத்து என்னுடைய படங்களில் இரண்டு, மூன்று ஹீரோ இருக்க வேண்டும். அப்போது தான் படம் மிகப்பெரிய ஹிட் கொடுக்கும் என்றார்.
இதையும் படிங்க: நயனுக்கு பாலிவுட்டில் குவியும் வாய்ப்புகள்… அடுத்த பட சம்பளம் இவ்வளவோ?
தொகுப்பாளினி இப்போ சினிமாட்டிக் யூனிவர்ஸ் பாப்புலர் ஆகி இருக்கிறது. உங்க நாயகர்களை இணைக்க வேண்டும் என்றால் எந்த எந்த கதாபாத்திரத்தினை இணைப்பீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். ஆனால் அதை இணைக்கணும் என நினைத்தாலும் அந்த நிலையில் இல்லை.
இப்போ இருக்கும் நிலையில் எனக்கு இயக்கம் செட்டாகவில்லை என ஒத்துக்கொள்கிறேன் என ஓபனாகவே சொல்லிவிட்டார். அதனால் இனி அரக்கன் நடிப்புக்காக மட்டுமே இருப்பார் எனக் கூறப்படுகிறது. தற்போது நானி நடிப்பில் உருவாக இருக்கும் 31வது படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகி இருக்கிறாராம். அப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…