×

சிகரெட் வாசனை எனக்கு பிடிக்கும் - ஸ்ருதிஹாசனுக்கு இது தேவையா?

நடிகையும், நடிகர் கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் மனதில் பட்டதை பேசும் பழக்கமுள்ளவர்.
 

சில மாதங்களுக்கு முன்பு தனக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், ஒருகட்டத்தில் அது பிடிக்காமல் விட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். 

தற்போது சமூக வலைத்தளங்களில் அவர் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.  அப்போது உங்களுக்கு பிடித்த வாசனைகள் என்ன ரசிகர் கேட்ட கேள்விக்கு ‘ரோஸ், சாக்லெட், கேதுரு மரத்தின் வாசம், பென்சில் துகள்களின் வாசம், புதிய தோள் பொருட்கள், சிகரெட் வாசனை (எனக்கு பழக்கமில்லை), புகையிலை வாசம், சிறு வயதில் நோட்டில் அழிக்க பயனப்டும் ரப்பரின் வாசம் ஆகியவை தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்தார்.

ஏற்கனவே மதுவை பற்றி சர்ச்சையில் சிக்கிய அவர் தற்போது சிகரெட் வாசனை பிடிக்கும் எனக்கூறியுள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News