Connect with us
dhanush

Cinema News

மீண்டும் துள்ளுகிறதே தனுஷின் இளமை… இட்லி கடை படத்தோட புது ஸ்டில்லைப் பாருங்க..!

தனுஷ் முதன் முதலாக நடித்த படம் துள்ளுவதோ இளமை. அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடித்து இருந்தார். படத்தில் மீசை இல்லாமல் ஸ்கூல் பையன் மாதிரி தோற்றத்தில் அப்பாவித்தனமும், சேட்டையும் கலந்த கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து இருந்தார்.

பாடல்கள் எல்லாமே மாஸாக இருந்தன. 2002ல் வெளியான இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஷெரின் நடித்தார். தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தான் தயாரிப்பாளர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

Also read: விஜய் கட்சிக்கு அஜீத் ஆதரவு… சிம்பாலிக்கா சொல்லி தெறிக்க விட்டுட்டாரே…!

மன்மத ராசா

இந்தப் படம் இளம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து அவருக்கு இதே பாணியில் படங்கள் வர ஆரம்பித்தன. வேகமான நடன அசைவுகள் கொண்டு திருடா திருடியில் ‘மன்மத ராசா’ன்னு ஆட்டம் போட்டு இருப்பார்.

தேர்ந்த நடிப்பு

புதுப்பேட்டை, ஆடுகளம், பொல்லாதவன் என இவரது படங்கள் ஒவ்வொன்றும் தேர்ந்த நடிப்பைக் கொண்டு இருந்தன. இப்போது படங்களில் நடிப்பதோடு மட்டும் அல்லாமல், தயாரிப்பு, பாடகர், இயக்கம் என்ற பாதைக்கும் வந்துவிட்டார்.

idli kadai

idli kadai

விருதுககள்

படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளார். இதுவரை 14 தென்னிந்திய சர்வதேச விருதுககள், 7 பிலிம்பேர், 4 தேசிய விருதுகள் பெற்று அசத்தியுள்ளார்.

இவர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்தார். சமீபத்தில் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். லிங்கா, யாத்ரா என இரு மகன்கள் உள்ளனர். தற்போது இவர் இயக்கி நடித்து வரும் படம் இட்லி கடை.

இளமையான லுக்

இந்தப் படத்தில் இவரது இளமையான லுக் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. மீண்டும் துள்ளுவதோ இளமையா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர். தற்போது இந்த ஸ்டில் வைரலாகி வருகிறது.

Also read:‘கிளைமாக்ஸ் புடிக்கல’.. சூப்பர் படத்தை ‘மிஸ்’ பண்ணிய விஜய்..

இட்லி கடை படத்தில் தனுஷ் உடன் ஜோடியாக திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நித்யா மேனன் நடித்துள்ளார். இவர்களுடன் ஷாலினி, பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top