Categories: Cinema News latest news

‘விடாமுயற்சி’க்காக அந்த முயற்சியை எடுப்பாரா அஜித்?.. ரிஸ்க்கா இருந்தாலும் ரேஸ் மன்னன்ல!…

Vidamuyarchi: தமிழ் சினிமாவில் அஜித் ஒரு மாபெரும் நடிகராக இருக்கிறார். தனக்கான இடத்தை அப்படியே தக்க வைத்துக் கொண்டு எந்தவொரு தலக்கணமும் இல்லாமல் தன் வழியில் செல்லும் நடிகராக இன்று வரை இருந்து கொண்டு வருகிறார்.

ஒரு பக்கம் ரைஃபிள் , ரேஸ், சைக்கிளிங், பைக் டூர் என தனக்கு சந்தோஷம் தருகிற விஷயத்திலும் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். நடிகர் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ரசிகர்களிடம் உறவாட வேண்டும் என்ற கொள்கையில் இருந்து சற்று மாறுபட்டவராக இருக்கிறார்.

இதையும் படிங்க: படம் கொலைவெறியா இருக்குன்னு வராம போயிடாதீங்க!.. குடும்பங்களை வரவழைக்க லியோ டீம் போட்ட செம பிளான்!..

நடிப்பது ஒரு தொழில். அதை சிறப்பாக செய்து கொடுப்பது தனது கடமை என்பதை மட்டுமே இன்றுவரை தன்னுடைய ஒரே குறிக்கோளாக வைத்துக் கொண்டு கெரியரை சுமூகமாக நடத்தும் ஒரு அற்புதமான நடிகராக அஜித் இருக்கிறார்.

இந்த நிலையில் நீண்ட காலமாக இருந்த பிரச்சினைக்கு இப்போதுதான் ஒரு முடிவே பிறந்திருக்கிறது. விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடந்துக் கொண்டிருக்கிறது.

இதையும் படிங்க: உலக மனநல தினத்தன்று, உங்கள் மனநலனை மேம்படுத்த சத்குரு வழங்கும் 5 டிப்ஸ் …

அதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் அங்கேயே முகாமிட்டிருக்கின்றனர். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை முழுவதுமாக வெளி நாடுகளிலேயே படமாக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதுவும் இரண்டு மாதங்களுக்கு படப்பிடிப்பை  முடித்து விட வேண்டும் என்ற தீவிர முயற்சியிலும் இறங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் விடாமுயற்சி படம் இந்த ஆண்டு ரிலீஸ் ஆகாது. ஆனால் அஜித்தின் முயற்சி இருந்தால் கண்டிப்பாக வரும் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்து விடலாம். மகிழ் திருமேனி ஒரு அற்புதமான இயக்குனர்.

இதையும் படிங்க: மொழி படத்தில் அப்படி நடிக்க எம்.எஸ்.பாஸ்கர் செஞ்ச விஷயம். டெடிகேஷன்னா அது இதுதான்!..

அவரை பற்றி எந்த பிரச்சினையும் இல்லை. அஜித் ஒழுங்காக தொடர்ச்சியாக கால்ஷீட் கொடுத்தால் படம் கண்டிப்பாக பொங்கலுக்கு ரிலீஸ் ஆகிவிடும். இல்லையென்றால் ஏப்ரல் 14 தான் என்று பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்தார்.

Published by
Rohini