Connect with us
/srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137
">


Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 137

இதெல்லாம் நடந்தா சூர்யாவோட மார்க்கெட் எங்கேயோ போயிடும்… அடுத்த நான்கு படங்கள்!

சூர்யா அடுத்ததாக நடிக்கவுள்ள நான்கு படங்கள் பற்றிய அறிவிப்புகள் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

18e51d4feac8feffe32a31942ce70f43

சூர்யா அடுத்ததாக நடிக்கவுள்ள நான்கு படங்கள் பற்றிய அறிவிப்புகள் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

சூரரைப் போற்று படத்தை சூர்யா பெரிய அளவில் நம்பியுள்ளார். இந்த படம் அடுத்த மாதம் ஓடிடி யில் ரிலிசாக உள்ள நிலையில் அடுத்து சூர்யா நடிக்கவிருக்கும் திரைப்படம் வாடிவாசல். இந்த படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார். இந்த படத்தின் மீது இப்போதே பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இதற்கடுத்த சூர்யா நடிக்கவுள்ள படங்கள் பற்றிய பட்டியல் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. வாடிவாசலுக்கு அடுத்து கல்வி பற்றிய படம் ஒன்றில் நடிக்கிறார் சூர்யா. இதைக் கூட்டத்தில் ஒருவன் இயக்குனர் ஞானவேல் இயக்குகிறார். கல்விக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சூர்யா இந்த படத்தில் முக்கியமானக் கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.

அதற்கடுத்து பாண்டிராஜ் இயக்கும், சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் குடும்ப படத்தில் நடிக்கிறார். பாண்டிராஜ் குடும்பப் பாங்கான படங்களை எடுப்பதில் கில்லாடி என்பது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு சூர்யா, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ படம் ஒன்றில் நடிக்கிறாராம். கடந்த சில ஆண்டுகளாக ஹிட் கிடைக்காமல் இருக்கும் சூர்யாவுக்கு இந்த படங்கள் எல்லாம் அமைந்தால் மீண்டும் அவர் மார்க்கெட் பல மடங்கு உயரும் என சொல்லப்படுகிறது.

google news
Continue Reading

More in
Warning: Undefined array key 0 in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

Warning: Attempt to read property "cat_name" on null in /srv/users/cinereporters/apps/cinereporters/public/wp-content/themes/click-mag/single.php on line 320

To Top