×

நான் சொன்னதை நிரூபிக்காவிட்டால் பத்மஸ்ரீ விருதையே திருப்பி அளிக்கிறேன் –கங்கனா ஓபன் சேலஞ்ச்

சுஷாந்த் மரணம் குறித்து தான் பேசிய கருத்துகளை நிரூபிக்காவிட்டால் தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பேன் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

 

சுஷாந்த் மரணம் குறித்து தான் பேசிய கருத்துகளை நிரூபிக்காவிட்டால் தனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை திருப்பி அளிப்பேன் என கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங்கின் மரணம் பாலிவுட்டில் பல சலசலப்புகளை உருவாக்கியது. சுஷாந்தின் தற்கொலைக்கு பாலிவுட்டில் இருக்கும் வாரிசு நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களின் ஆதிக்கமே காரணம் என்று ஆணித்தரமாகக் குற்றம் சாட்டினார். கங்கனாவின் இந்த கருத்துக்கு பாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால் ஒருசாரார் கங்கனாவின் கருத்து ஆதாரப்பூர்வமற்றது எனவும் ஒருசாரார் குற்றம் சாட்டி வருகின்றனர். வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கங்கனா ‘சுஷாந்தின் மரணம் குறித்து நான் கூறிய கருத்துகளை என்னால் நிரூபிக்க முடியவில்லை என்றால் எனக்கு அளிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை நான் திருப்பி அளிப்பேன். ஆதாரம் இல்லாமல் எந்த விஷயத்தையும் நான் பொதுவெளியில் பேசுபவள் அல்ல’ எனக் கூறியுள்ளார்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News