Categories: Cinema News latest news throwback stories

இளையராஜா மீது அவதூறு.. கண்ணீர் விட்டு கதறிய இயக்குனரின் தில்லாலங்கடி வேலை.. வெளிப்பட்ட உண்மைகள்..

விஜய் சேதுபதி நடிப்பில், சீனு ராமசாமி இயக்கத்தில் இந்த வாரம் மாமனிதன் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது.

அந்த பத்திரிக்கையாளர் சந்திப்புதான் தற்போதும் பேசுபொருளாக இருக்கிறது. அப்படத்தின் இயக்குனர் சீனு ராமசாமி , நான் என்ன பாவம் செய்தேன். ஏன் என்னை இளையராஜா ஒதுக்கி வைக்கிறார்?’ என கண்ணீர் விட்டு விட்டார்.

இதனை பார்த்த பலர் இளையராஜா ஏன் இவ்வளவு கோபப்படுகிறார். என பேசி வந்தனர். இது இளையராஜா மீது அவதூறு பரப்பும் வகையில் இருக்கிறது என பேசப்பட்டது. இளையராஜா காரணம் இல்லாமல் யாரிடமும் கோபப்படமாட்டார் எதோ காரணம் இருக்கிறது என்று விவரம் அறிந்தவர்கள் கூறினார்கள்

தற்போது அதற்கான விடை கிடைத்துள்ளதாக அண்மையில் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது, சீனு ராமசாமி படத்தில் வைரமுத்து தான் பாடல் எழுதுவது வழக்கம். இளையராஜா இசையில் வைரமுத்து பாடல்கள் பல வருடங்களாக எழுதியது கிடையாது.   மாமனிதன் படத்திற்கு இளையராஜா – யுவன் என இருவரும் சேர்ந்து இசையமைக்க ஒப்புக்கொண்டனர்.

இதையும் படியுங்களேன் இத்தனை ஹிட் கொடுத்ததும் செல்லகுட்டி பிரியங்கா மோகன் செய்யாத காரியம்.. இன்ப அதிர்ச்சியில் திரையுலகம்.!

அந்த சமயம் இயக்குனர் சீனு ராமசாமி,  நான் இளையராஜாவையும் , வைரமுத்துவையும் சேர்த்து வைக்க போகிறேன் என்பது போல கூறிவிட்டாராம். இதற்காக தான் இளையராஜா கோபப்பட்டு சீனு ராமசாமியை தான் இசையமைக்கும் அறைக்குள் அனுமதிக்கவே இல்லை என கூறப்படுகிறது.

இளையராஜாவையும் வைரமுத்துவையும் சேர்த்துவைக்கும் விளையாட்டில் இயக்குனர் பாரதிராஜவே முடியாமல் விட்டுவிட்டு தான்  கிழக்கு சீமையிலே படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க வைரமுத்து பாடல் எழுத வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan