நடிகை பிரியங்கா மோகன் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ் தான் என்றாலும் நடிக்க அறிமுகமாகியது கன்னட திரையுலகில் தான். அதன் பிறகு நானி நடித்த கேங் லீடர் திரைப்படம் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
அதன் பிறகே டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் நடித்து தயாரித்து இருந்த இந்த திரைப்படம் 100 கோடி வசூலை பெற்றது. அதன் பிறகு முன்னணி ஹீரோவான சூர்யாவுடன் இணைந்து எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்தார். அந்த படமும் நல்ல வெற்றியை கொடுத்தது.
இந்த ஹிட்டை தொடர்ந்து மீண்டும் சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து டான் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த படமும் 100 கோடி வசூலை தாண்டியது. இப்படி தொடருந்து 3 படங்கள் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து அது ஹிட்டானாலும் மற்ற நடிகைகள் செய்வதை பிரியங்கா மோகன் செய்யவில்லையாம்.
இதையும் படியுங்களேன் –அப்பாவை இருக்க சொல்லுங்க நானே வரேன்.. அம்மாவுக்கு ஆர்டர் போட்ட விஜய்.?! உண்மை நிலவரம் இதோ…
ஆம், மற்ற நடிகைகள், ஏன் நடிகர்கள் கூட ஒரு படம் ஹிட்டானால் அடுத்த படத்திற்க்கு சம்பளம் ஏற்றிவிடுகின்றனர். சிவகார்த்திகேயன் கூட டாக்டர் படத்தை விட டான் படத்தில் அதிக சம்பளம் வாங்கினார் என கூறப்படுகிறது.
ஆனால், டாக்டர் படத்திற்கு வாங்கிய சம்பளம் 50 லட்சம் தான் தற்போதும் அவரது சம்பளம் என கூறப்படுகிறது. ஏன், நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிக்க உள்ள ஜெயிலர் படத்திற்கு கூட இதே சம்பளம் தான் என கூறப்படுகிறது. இந்த ஒரு நல்ல குணம் தான் அடுத்தடுத்த பெரிய படங்களை கைப்பற்றுவதற்கு ப்ரியங்கா மோகனுக்கு உதவுகிறது என சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.