இளையராஜாவின் மடியில் சிறுமியாக பவதாரிணி!. போட்டோவ பாக்கும்போதே கண்ணு கலங்குதே!..

 
இளையராஜாவின் மடியில் சிறுமியாக பவதாரிணி!. போட்டோவ பாக்கும்போதே கண்ணு கலங்குதே!..
Ilayaraja: தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் இசைஞானி இளையராஜா. இவருக்கு இரண்டு மகன்கள். இதில் மூத்தவர் கார்த்திக் ராஜா. அடுத்து மகள் பவதாரிணி. கடைசி மகன்தான் யுவன் சங்கர் ராஜா. பவதாரிணிக்கு 47 வயது ஆகிறது. நேற்று திடீரென அவர் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை யாராலும் நம்பமுடியவில்லை. கடந்த 4 வருடங்களாக அவர் கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் அவரிடம் யாரும் சரியாக சொல்லவில்லை என்றும், சாதாரன வயிற்று வலிதான் என சொல்லி மருத்துவம் பார்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில்தான், சமீபத்தில் ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக இலங்கை சென்ற அவர் சிகிச்சை பலனின்றி அங்கேயே மரணமடைந்துள்ளார். இதையும் படிங்க: விஜயகாந்துக்கு துடிக்காத மனசு பவதாரிணிக்கு துடிக்குதா?!. வடிவேலுவிடம் பொங்கும் ரசிகர்கள்.. கடந்த 4 நாட்களாகவே அவரின் உடல் நிலை மிகவும் மோசமாகியுள்ளது. எப்போது அவரின் உயிர் பிரியும் என சொல்ல முடியாது என மருத்துவர்கள் சொன்னதால்தான் அயோத்தி ராமர் கோவில் திறப்புக்கு கூட இளையராஜா செல்லவில்லை என சொல்லப்படுகிறது. பவதாரிணியின் உடல் இலங்கையிலிருந்து இன்றுதான் சென்னை வந்தது. இளையராஜாவின் மடியில் சிறுமியாக பவதாரிணி!. போட்டோவ பாக்கும்போதே கண்ணு கலங்குதே!.. அதன்பின்னர் இறுதிச்சடங்கு நடைபெறும் என சொல்லப்படுகிறது. பவதாரிணியின் மறைவுக்கு கமல்ஹாசன், வடிவேலு என திரைப்பிரபலங்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்துள்ளனர். ராசைய்யா படத்தில் உருவான ‘மஸ்தானா மஸ்தானா’ பாடல் மூலம் சினிமாவில் பாட துவங்கியவர்தான் பவதாரிணி. இதையும் படிங்க: புற்றுநோயால் குரலை இழந்த பவதாரிணி!.. இசைஞானிக்கு இப்படி ஒரு சோகமா!.. அதன்பின் பல திரைப்படங்களிலும் பாடியிருக்கிறார். சில படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இருந்திருக்கிறார். இரண்டு மகன்கள் இருந்தாலும் ராஜாவுக்கு மகள் பவதாரிணி மீது அதிக பாசம். எனவே, ரெக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்து செல்வது, வெளிநாடுகளுக்கு சென்றால் தன்னுடன் அழைத்து செல்வது என பாசம் காட்டினார். இளையராஜாவின் மடியில் சிறுமியாக பவதாரிணி!. போட்டோவ பாக்கும்போதே கண்ணு கலங்குதே!.. இந்நிலையில், சினிமாவுக்கு வந்த சில வருடங்களில் ராஜா கவிஞர் கண்ணதாசன் வீட்டில் கொஞ்சநாட்கள் குடியிருந்தார். அப்போது மனைவி, மகள், மகன்களுடன் அவர் எடுத்துகொண்ட புகைப்படங்கள்தான் இப்போது வைரலாகி வருகிறது. இளையராஜாவின் மடியில் சிறுமியாக பவதாரிணி!. போட்டோவ பாக்கும்போதே கண்ணு கலங்குதே!..

From Around the web