விஜயகாந்துக்கு துடிக்காத மனசு பவதாரிணிக்கு துடிக்குதா?!. வடிவேலுவிடம் பொங்கும் ரசிகர்கள்..
இளையராஜாவின் மகள் பவதாரிணி இறந்து போனது ரசிகர்களிடமும், திரையுலகினரிடம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் அவருக்கு 47 வயதுதான் ஆகிறது. அவருக்கு கல்லீரல் புற்றுநோய் என்பதே அவரின் மரணத்திற்கு பின்னர்தான் எல்லோருக்கும் தெரியவந்துள்ளது.
அதோடு, பவதாரிணிக்கே இது தெரியாது எனவும் தெரிந்த போது அவரின் நோய் 4வது நிலையில் இருந்ததாகவும் ஒரு செய்தி உலவி வருகிறது. சமீபத்தில்தான் அவரின் நோய் தீவிரமடைந்தது எனவும் இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை மூலம் காப்பாற்ற முடியுமா என நினைத்தே அவரை அங்கு அனுப்பி வைத்தார். ஆனால், இறந்த உடலாகத்தான் பவதாரிணி திரும்பி வந்திருக்கிறார்.
இதையும் படிங்க: 50 ஆயிரம் பாடல்களுடன் ஒப்பிட்டாலும் தனித்து நின்ற பவதாரிணியின் பாடல் இதுதான்…!
பவதாரிணியின் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகி்றார்கள். நடிகர் வடிவேலும் கண்ணீர் மல்க ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ‘நேற்று படப்பிடிப்பி்ல் இருந்து வீட்டுக்கு வந்ததும் இந்த செய்தி என்ன நிலைகுலைய வைத்துவிட்டது. எனக்கு ஒன்றும் புரியவில்லை. நெஞ்சமெல்லாம் நொறுங்கிவிட்டது.
பவதாரிணி ஒரு சாதாரண குழந்தை இல்லை. தெய்வக்குழந்தை. அந்த குழந்தையின் குரல் குயில் போல இருக்கும். அவரின் மறைவு உலக தமிழர்கள் நொறுங்கி போயிருக்கிறார்கள். தைப்பூச நாளில் உயிரிழந்ததால் அவர் முருகனிடம் சென்றுவிட்டார். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்' என அழுதபடியே கூறியுள்ளார்.
இதையும் படிங்க: அம்மா இருக்கிற வரைக்கும் நல்லா இருந்தா.. பவதாரிணி குறித்து சகோதரி பரபரப்பு பேட்டி
பவதாரிணிக்கு அவர் இரங்கல் தெரிவித்ததில் யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், விஜயகாந்த் இறந்தபோது வடிவேலு எந்த இது போல வீடியோ வெளியிடவில்லை. வீடியோ போடவில்லை என்றாலும் ஒரு இரங்கல் செய்தியையாவது அவர் வெளியிட்டிருக்கலாம். ஆனால், அவர் அதையும் செய்யவில்லை.
இதை கையிலெடுத்த விஜயகாந்த் ரசிகர்கள் பவதாரிணிக்கு செய்தது போல கேப்டனுக்கும் ஒரு இரங்கல் செய்தியையோ, வீடியோவையோ வெளியிட்டிருக்கலாம் என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். விஜயகாந்த் ரசிகர்கள் இல்லாத மற்றவர்களும் இதே கருத்தை பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கேன்சர் இருப்பது தெரியாமலே இறந்த பவதாரிணி!… மகளை காப்பாற்ற கடைசி வரை போராடிய இளையராஜா…