×

தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் பிகில் பட நடிகை..!!

நடிகர்களுக்கென தனியாக ரசிகர்கள் இருப்பதெல்லாம் சாதாரண விஷயம்தான். ஆனால் ஒரு இயக்குனருக்கு ரசிகர்கள் இருப்பதெல்லாம் அரிது. அந்தவகையில் இயக்குனர் செல்வராகவனுக்கென தனியாக பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. 

 
dhanush

நடிகர்களுக்கென தனியாக ரசிகர்கள் இருப்பதெல்லாம் சாதாரண விஷயம்தான். ஆனால் ஒரு இயக்குனருக்கு ரசிகர்கள் இருப்பதெல்லாம் அரிது. அந்தவகையில் இயக்குனர் செல்வராகவனுக்கென தனியாக பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. 

இவர் நடிகர் தனுஷின் உடன்பிறந்த அண்ணனாவார். தனுஷை வைத்து இவர் துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை,மயக்கம் என்ன ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் காதல் கொண்டேன் பெரும்பாலான திரையரங்கில் 150 நாட்களுக்கும் மேல் ஓடியது குறிப்பிடத்தக்கது.

selvaragavan
selvaragavan

புதுப்பேட்டை மற்றும் மயக்கம் என்ன படங்கள் வெளியானபோது சரியாக போகாவிட்டாலும் இன்றளவிலும் ரசிகர்களால் பேசப்படும் ஒரு படமாக உள்ளது. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பின் இவர் தனுஷை வைத்து மீண்டும் ஒரு படத்தை இயக்க உள்ளார். இப்படத்திற்கு 'நானே வருவேன்' என பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் நாயகியாக நடிப்பதற்கு பல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கடைசியாக நடிகை இந்துஜாவை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வந்துள்ளது. மேலும், படத்தில் நடிக்கவிருப்பவர்கள் பற்றி எந்த அறிவிப்பும் இன்னும் வெளியாகவில்லை. இந்துஜா 'மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 

indhuja
indhuja

இப்படத்தில் நடிகர் வைபவிற்கு தங்கை பாத்திரத்தில் நடித்திருந்தார். தங்கையாக நடித்திருந்தாலும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்தார். இதையடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வந்து குவிந்தது. விஜய் நடிப்பில் வெளியான பிகில் படத்தில் நடித்ததன்மூலம் அனைவராலும் அறியப்படும் நடிகையானார்.

இரண்டாம் தர நாயகியாக நடித்துவந்த இந்துஜா முதன்முறையாக தனுஷ் படத்தில் முன்னணி நாயகியாக நடிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்துஜா Khakhee என்ற படத்தில் நடித்து வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News