×

இந்தியா vs நியுசிலாந்து முதல் டி 20 போட்டி ! அச்சம் கொடுக்கும் மழை !

நியுசிலாந்தில் நடக்க இருக்கும் முதல் டி 20 போட்டியின் போது மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

 

நியுசிலாந்தில் நடக்க இருக்கும் முதல் டி 20 போட்டியின் போது மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

நியுசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி அங்கு 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதையடுத்து முதல் போட்டி இன்று ஆக்லாந்தில் இந்திய நேரப்படி 12.20 க்கு தொடங்குகிறது. இந்நிலையில் போட்டி நடக்கும் பகுதியில் மழைப் பெய்வதற்கு லேசான வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தியா இதுவரை டி 20 போட்டிகளில் மிகவும் மோசமான புள்ளி விவரங்களைக் கொண்டுள்ள அணி என்றால் அது நியுசிலாந்துதான் . இதுவரை அந்த அணியோடு 11 போட்டிகளை விளையாடியுள்ள இந்தியா அதில் மூன்றில் மட்டுமே வென்றுள்ளது. இந்த மோசமான சாதனையில் இருந்து இந்த தொடரை வென்று வெளியேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News