Connect with us

Cinema News

இது சுதந்திரன தின ஸ்பெஷல்!. மிரட்டலாக வெளிவந்த இந்தியன் 2 பட புதிய போஸ்டர்!…

தமிழ் சினிமாவில் சுதந்திர தின உணர்வை ஊட்டுவது மாதிரி பல திரைப்படங்களும், பாடல்களும் வெளிவந்திருக்கிறது. குறிப்பாக அர்ஜூன் மற்றும் விஜயகாந்த் படங்களில் இதை அதிகம் பார்க்க முடியும். ஆகஸ்டு 15ம் தேதி பிறந்ததாலோ என்னவோ நடிகர்களில் நாட்டுப்பற்று அதிகம் உள்ளவராக அர்ஜூன் இருக்கிறார்.

தனது கையில் இந்திய நாட்டின் தேசியக்கொடியை பச்சை குத்தி வைத்திருக்கும் அர்ஜூன் ஜெய்ஹிந்த் எனும் படத்தையே இயக்கியிருந்தார். 90களில் சரத்குமார் ஐ லவ் இந்தியா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். அதேபோல், ஷங்கரின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து 1996ம் வருடம் வெளியான திரைப்படம் இந்தியன்.

இதையும் படிங்க: ‘அவ்வை சண்முகி’க்கே டஃப் கொடுக்கும் ரோல் : இந்தியன் 2-வில் மிரட்டப்போகும் லேடி கெட்டப்!…

சுதந்திர போராட்ட தியாகி ஒருவர் நாட்டில் லஞ்சத்திற்கு எதிராக போராடும் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. இப்படத்தில் கமல் தந்தை மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது. அதன்பின் பல வருடங்களுக்கு பின் இந்தியன் 2 துவங்கப்பட்டது.

ஆனால், பல பஞ்சாயத்துக்கள் நடந்து படப்பிடிப்பு தடைபட்டு தற்போது படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படத்தின் சில காட்சிகள் தென் ஆப்பிரிக்காவில் படம்பிடிக்கப்பட்டது. இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் ரகுப் ப்ரீத் சிங், பிரியா பவானி, காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்தியன் 2 படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. கமல் பட ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

indian

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top