vijaysethupathi
தமிழ் சினிமாவில் படு பிஸியாக உள்ள நடிகராக விஜய்சேதுபதி இருந்து வருகிறார். தமிழ் மட்டுமில்லாமல் மற்ற மொழிப் படங்களிலும் ஒரு தேடப்படும் நடிகராக மாறியிருக்கிறார். கிடைத்த ரோலில் நடிப்பதை விட்டு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த எந்த மாதிரியான கதாபாத்திரம் ஆனாலும் துணிந்து நடிக்கக் கூடிய நடிகர் விஜய்சேதுபதி.
vijaysethupathi
அதனாலேயே மிகவும் தேடப்படும் நடிகராக விளங்கி வருகிறார் விஜய்சேதுபதி. ஹிந்தியில் “மெர்ரி கிருஸ்துமஸ்”, “மும்பைக்கார்”, ஆகிய திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அதே போல் “ஃபார்சி” என்ற ஹிந்தி வெப் சீரீஸிலும் நடித்துள்ளார். ஃபார்சி வெப் சீரிஸில் மிக கெட்ட வார்த்தைகளை பேசியிருப்பதாக அவர் மீது அதிர்ப்தி கிளம்பியுள்ளது.
இதுமட்டுமில்லாமல் ‘காந்தி டாக்ஸ்’ என்ற மௌனம் படத்திலும் நடித்து வருகிறார். இப்படி படுபிஸியாக நடித்து வரும் விஜய்சேதுபதியை சமீபத்தில் லாக் செய்தார் சுந்தர்.சி.அவருடைய அரண்மனை நான்காம் பாகத்தில் விஜய்சேதுபதியை ஹீரோவாக்க முடிவு செய்திருந்தார்.
vijaysethupathi
விஜய்சேதுபதியும் சம்மதித்து அதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகின. இந்த நிலையில் திடீரென அரண்மனை நான்காம் பாகத்தில் இருந்து விஜய்சேதுபதி விலகியதாக தகவல் வெளியானது. அதாவது அவருக்கு ஏகப்பட்ட கமிட் மெண்ட்கள் இருக்கின்ற காரணத்தால் அந்த படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதன் காரணமாகவே இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்ற தகவல் பரவி வருகிறது.
vijay sethupathi sundar c
அப்படியென்றால் அந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில் மீண்டும் சுந்தர்.சியே நடிக்கப் போகிறாராம். இதற்கு முன் வெளிவந்த மூன்று பாகங்களிலும் அவர் தான் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனாலேயே நான்காம் பாகத்தில் சற்று வித்தியாசமாக விஜய் சேதுபதியை முடிவு செய்தார். ஆனால் அவரும் இப்பொழுது வெளியேற வேறு வழியில்லாமல் சுந்தர் .சி தான் நடிக்க போகிறாராம்.
இதையும் படிங்க : ‘விக்ரம்’ டீனாவிற்கு வாய்ஸ் கொடுத்து ரொம்ப ஃபீல் பண்ணேன்!.. இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கல!..
TVK Vijay:…
Vijay: தமிழ்…
Idli kadai:…
Vijay: கரூரில்…
Kantara 2…