×

கவின் லாஸ்லியா காதல் அவ்வளவுதானா?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா மிகவும் நெருக்கமாகி ஒருவரை ஒருவர் காதலித்தார்கள் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் வெளியே வந்தவுடன் அவர்கள் திருமணம் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா மிகவும் நெருக்கமாகி ஒருவரை ஒருவர் காதலித்தார்கள் என்பதும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் வெளியே வந்தவுடன் அவர்கள் திருமணம் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது

கவினை லாஸ்லியா காதலிப்பது லாஸ்லியாவின் பெற்றோர்களுக்கு விருப்பமில்லை என்றாலும் லாஸ்லியா தனது பெற்றோர்களை கன்வின்ஸ் செய்து கவினை கைபிடிப்பார் என்று ரசிகர்கள் கருதினர் 

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கவின் மற்றும் லாஸ்லியா தங்களது காதல் குறித்து எந்தவித தகவல் பரிமாற்றத்தையும் செய்யவில்லை. அவர்களுடைய சமூக வலைப்பக்கத்தில் கூட காதல் குறித்த செய்தியை வெளியிடுவதை தவிர்த்து வந்தனர். மேலும் லாஸ்லியா ஒரு சினிமா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இதனையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கவினுக்கு இன்னும் எந்தவிதமான சினிமா வாய்ப்பு கிடைக்காத நிலையில் லாஸ்லியாவுக்கு 2 சினிமா வாய்ப்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஹர்பஜசிங் அறிமுகமாகவுள்ள ’பிரண்ட்ஷிப்’ என்ற படத்திலும் ஆரியுடன் ஒரு படத்திலும் லாஸ்லியா நடிக்க உள்ளதால் சினிமாவில் பிசியாகி விட்ட லாஸ்லியாவுக்கு இனிமேல் காதலிக்க நேரம் இருக்காது என்றே கூறப்படுகின்றது. எனவே கவின் லாஸ்லியா காதல் பிக் பாஸ் வீட்டோடு முடிந்து விட்டதாகவே கருதப்படுகிறது 

From around the web

Trending Videos

Tamilnadu News