×

சன்னோட சன்னுக்கே தடையா? - அழகிரி ஆதரவாளர்கள் அலப்பறை... வைரலாகும் போஸ்டர்கள்

மதுரையில் அழகிரி ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியால் திமுகவிலிருந்து நீக்கப்பட்டவர் அவரின் மகன் அழகிரி. அது நடந்து முடிந்து சில வருடங்கள் ஆகியும் இன்னும் அவரை திமுகவில் இணைக்கவில்லை. அதில், ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லை எனத்தெரிகிறது.

இந்நிலையில், மதுரையில் அவ்வப்போது அழகிரியின் ஆதரவாளர்கள் அவருக்கு ஆதரவாக போஸ்டர்கள் ஓட்டி வருகின்றனர். வருகிற 30ம் தேதி அழகிரி பிறந்தநாள் கொண்டாடவுள்ளார்.

இதைத் தொடர்ந்து அவரின் ஆதரவாளர்கள் பரபரப்பை ஏற்படுத்தும் வாசகங்கள் அடங்கிய போஸ்டரை ஓட்டியுள்ளனர். அதில்,  sun னோட son னுக்கே தடையா, ஒற்றுமையோடு இருந்து ஒற்றுமையாக பயணிப்போம் !, ஆசையில் அபாயகரமானது அதிகார ஆசை.. அசிங்கமானது துரோக ஆசை. என்கிற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது. 

From around the web

Trending Videos

Tamilnadu News