×

ரஜினி நிற்கப்போவது இந்த தொகுதிதானா? வெளியானது தகவல் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகும் தொகுதியாக இரு தொகுதிகள் கணிக்கப்பட்டு வருகின்றன.

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பித்து அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போகும் தொகுதியாக இரு தொகுதிகள் கணிக்கப்பட்டு வருகின்றன.

இரு வருடங்களுக்கு முன்னதாக கட்சி ஆரம்பித்து அரசியலில் இறங்கப் போவதை ரஜினி உறுதி செய்தார். இதையடுத்து தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே இருக்கும் நிலையில் ஏப்ரல் அல்லது மே  மாதத்தில் கட்சியை ஆரம்பிப்பார் என சொல்லப்படுகிறது.

அப்படி அவர் கட்சி ஆரம்பித்து தேர்தலில் நிற்கும் போது எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கு கிருஷ்ணகிரியில் உள்ள வேப்பனஹள்ளி என்ற தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அந்த தொகுதியில்தான் ரஜினியின் ரசிகர்கள் பட்டாளம் அதிகமாக இருப்பதாகவும் அங்கு அவரின் மக்கள் மன்றம் நிறைய சேவைகள் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும் சென்னையில் உள்ள மயிலாப்பூர் தொகுதியில் நிற்கும் எண்ணம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News