×

கௌதம் மேனன் & ஹாரிஸ் கூட்டணி பிரிந்ததன் காரணம் இதுதானா? வெளியான தகவல்

கௌதம் மேனன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான பாடல்கள் ஒரு தசாப்தத்தின் மறக்க இயலா பாடல்களாக இன்றும் அமைந்துள்ளன.

 

கௌதம் மேனன் மற்றும் ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் உருவான பாடல்கள் ஒரு தசாப்தத்தின் மறக்க இயலா பாடல்களாக இன்றும் அமைந்துள்ளன.

2001 ஆம் ஆண்டு வெளியான மின்னலே படத்தில் ஹாரிஸ் ஜெயராஜை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் கௌதம் மேனன். அதன் பிறகு அவர்கள் கூட்டணியில் உருவான காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம் மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய படங்களின் எல்லாப் பாடல்களுமே அதிரி புதிரி ஹிட்தான். இதனால் இந்த கூட்டணி மணிரத்னம் ஏ ஆர் ரஹ்மான் காம்போ போல கவனம் பெற்றது. ஆனால் வாரணம் ஆயிரம் திரைப்படத்துக்குப் பின் இந்த கூட்டணி உடைந்தது.

இதற்கான காரணம் என்னவென்று பலவிதமான கருத்துகள் சொல்லப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இப்போது அவர்களின் பிரிவுக்கான காரணம் என்ன என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜை தனது மின்னலே படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் கௌதம் மேனன். அந்த உரிமையை பயன்படுத்திக் கொண்டு அவர் ஹாரிஸ் ஜெயராஜுக்கு அவர் மிகவும் கம்மியான சம்பளமே கொடுத்து வந்துள்ளார். அது மார்க்கெட்டில் ஹாரிஸ் ஜெயராஜின் மார்க்கெட்டுக்கு கொஞ்சம் கூட பொருந்ததாக இருந்ததால் ஹாரிஸ் ஜெயராஜ் அதிருப்தி அடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் அவர்களின் பிரிவுக்கு ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News