சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் சொதப்பிய நிலையில், நெல்சன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படமும் உருப்படாது என்றும் பீஸ்ட் படத்தை பண்ணது போலத்தான் நெல்சன் பண்ணப் போகிறார் என கனவு கண்டு கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுக்கும் வகையில் ஜெயிலர் திரைப்படத்தின் பிரம்மாண்ட வசூல் வேட்டை பலரது தூக்கத்தையே கெடுத்து விட்டது.
அடுத்து லியோ திரைப்படம் வெளியாகப் போகிறதே என்கிற சந்தோஷத்தை விட ரஜினிகாந்த் அடுத்து லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து விடக் கூடாது என்கிற வயித்தெரிச்சல் தான் விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்திருந்தது.
இதையும் படிங்க: போடுறா வெடிய!.. மீண்டும் கல்லா கட்ட ரெடியான சன் பிக்சர்ஸ்!.. தலைவர் 171 அதிகாரப்பூர்வ அறிவிப்பு….
அதன் விளைவாக நேற்று சமூக வலைதளங்கள் முழுவதும் விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய்க்கு ஆதரவாக செய்திகளை பதிவிட்டு வரும் இன்ஃப்ளூயன்ஸர்கள் என பலரும் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை இயக்கப் போவதில்லை என்றும் தளபதி 171 படத்தில் இருந்து அவர் வெளியேறிவிட்டார் என்றும் உருட்டத் தொடங்கினர்.
மேலும், அதற்கு காரணமாக லியோ படத்தின் இடைவேளை காட்சியில் வரும் ஸ்நைப்பர் ஷாட் காட்சியை அப்படியே நெல்சன் முன்னதாக திருடி ஜெயிலர் படத்தில் வைத்து விட்டார் என்றும் லியோ படத்தின் இடைவேளை காட்சியையே தற்போது லோகேஷ் கனகராஜ் மாற்றி வருகிறார் அதன் காரணமாகவே ரஜினி படத்தில் இருந்து அவர் விலகுகிறார் என மெகா உருட்டையே உருட்டினர்.
இதையும் படிங்க: ஃபேன்டா பாட்டில் நடிகை ஆண் நண்பர்களுடன் ஜல்ஷா!.. ஆடிப்போன கோலிவுட்.. என்ன சிம்ரன் இதெல்லாம்!..
அந்த உருட்டு சன் பிக்சர்ஸ் சமஸ்தானத்தையும் விட்டு வைக்காமல் ஆட்டம் காண வைத்த நிலையில், அதிரடியாக விஜய் ரசிகர்கள் பரப்பி வரும் வதந்திகளை முடிவுக்கு கொண்டு வரத்தான் அவசர அவசரமாக இப்படியொரு அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது என்றும் ரஜினிகாந்த், அனிருத்துக்கு கொடுத்த கார் மற்றும் காசோலை எல்லாம் இந்த படத்துக்கான அட்வான்ஸ் தான் என்றும் கூறுகின்றனர்.
விஜய் ரசிகர்கள் லியோ படத்துக்கு கொடுத்த கொஞ்ச நஞ்சம் முட்டும் இப்படி ஆகிடுச்சே என்றும் லோகேஷ் கனகராஜ் அடுத்து ரஜினியை இயக்கும் படம் ஜெயிலரை விட பிரம்மாண்ட வசூல் வேட்டையை நடத்தும் என்றும் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…