Connect with us

latest news

நீங்க என்ன சமூகசேவைக்கா கேட்குறீங்க? சும்மா எதுக்கு இந்த திடீர் நாடகம்.. தனுஷ் ரசிகர்களிடம் சிக்கிய நயன்…

Nayanthara vs Dhanush:  தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷிற்கு எதிராக தொடர்ச்சியாக விமர்சனங்கள் வருவது வாடிக்கைதான். அந்த வகையில் தற்போது அந்த லிஸ்டில் இணைந்திருக்கிறார் நடிகை நயன்தாரா. இது குறித்து அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் நிலையில் தனுஷ் ரசிகர்கள் நயன்தாராவுக்கு எதிராக போர்க்கொடி தூக்க தொடங்கி இருக்கின்றனர்.

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரின் திருமண டாக்குமெண்டரி நெட்ப்ளிக்ஸில் வெளியிடப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இரண்டு ஆண்டுகள் கழித்தும் அது குறித்த எந்த தகவலும் வெளியாகாமல் இருந்து வந்தது. இந்த நேரத்தில் தற்போது நயன்தாரா நடிகர் தனுஷ் நானும் ரவுடிதான் பாடலுக்கு அனுமதி அளிக்காததே இந்த காலதாமதிற்கு காரணமாக குற்றச்சாட்டை முன்வைத்து தனுஷ் மீது பல விஷயங்களை புகாராக தெரிவித்திருக்கிறார்.

இதையும் படிங்க: Allu Arjun:’அந்த’ விஷயத்துல தளபதி விஜயை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்?

நானும் ரவுடிதான் பட சூட்டிங் சமயத்தில் எடுக்கப்பட்ட பிடிஎஸ் மூன்று நொடி காட்சிகளுக்கு கூட பத்து கோடி வரை நஷ்ட ஈடு கேட்டிருப்பது அதிர்ச்சி அளித்திருப்பதாக நடிகை நயன்தாரா பேசியிருக்கிறார். இந்த அறிக்கை தற்போது வைரலாகி வரும் நிலையில் தனுஷின் ரசிகர்கள் கொந்தளித்து நயனின் மீது புகார்களை தெரிவிக்க தொடங்கி இருக்கின்றனர்.

இது அப்பட்டமான நயனின் வன்மம் தான். தயாரிப்பாளராக தனுஷ் அவர்களுடைய கோரிக்கையை மறுப்பதற்கு முழு உரிமை உண்டு. நானும் ரவுடிதான் படத்தின் சமயத்தில் என்ன நடந்தது என்பது பலருக்கு தெரியும். தயாரிப்பாளரின் கண்ணோட்டத்தில் இருந்து அவருடைய பணம் தேவை இல்லாமல் செலவழியும் போது கோபமாகத்தான் இருக்கும்.

இதையும் படிங்க: Biggboss Tamil: பிக்பாஸ் போட்டியாளருக்கு ‘அடித்த’ அதிர்ஷ்டம்… என்னன்னு நீங்களே பாருங்க!

அப்போது தனுஷிற்கும்  நோட்டீஸ் அனுப்ப உரிமை உண்டு. உங்கள் கணவருக்கு நல்லது செய்த தனுஷுக்கு கிடைத்திருப்பது என்னவோ கெட்ட பெயர்தான். இதற்காகவே தனுஷ் உங்கள் மீது அவதூறு வழக்கை நீதிமன்றத்தில் பதிந்து அம்பது கோடி நஷ்டஈடு கேட்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். தொடர்ச்சியாக தனுஷிற்கு ஆதரவு தெரிவித்து வருவதாகவும் ஹேஸ்டேக்குகள் போடப்பட்டு வருகிறது.

author avatar
Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in latest news

To Top