Categories: Cinema News latest news

ஜெய்சங்கரின் ஆசையை நிறைவேற்றிய மகன்! அனைவரின் கவனத்தையும் ஈர்த்த விஜய்சங்கர்

தமிழ் சினிமாவில் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் படங்களில் நடித்து மக்களின் பேராதரவை பெற்றவர் நடிகர் ஜெய்சங்கர். சிவாஜி , எம்ஜிஆர் என இரு ஆளுமைகள் சினிமாவை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த காலம். அந்த நேரத்தில் ஜெய்சங்கர் எண்ட்ரி அவரின் நடிப்பு திறமை பெருமளவு பேசப்படவில்லை. ஆனால் ஒரு சிறந்த மனிதராக மக்கள் முன் அறியப்பட்டார்.

யாருக்கு என்ன உதவி வேண்டுமானாலும் தயங்காமல் முதல் ஆளாக வந்து நிற்கக் கூடியவர். தயாரிப்பாளர்களுக்கு ஒரு செல்லப்பிள்ளையாகவே மாறியவர். 1965 ஆம் ஆண்டு வெளியான இரவும் பகலும் என்ற படத்தின் மூலம் முதன் முதலில் சினிமாவில் அறிமுகமானார் ஜெய்சங்கர். ஆனால் துரதிர்ஷ்டம் இந்தப் படம் வெளியான அதே நேரத்தில் ப்ளாக் பஸ்டர் ஹிட்டான எம்ஜிஆரின் எங்கவீட்டுப்பிள்ளையும் சிவாஜியின் பழநி திரைப்படமும் வெளியானது.

இதையும் படிங்க: விஜய்க்கு வாழ்க்கை கொடுத்து காணாம போயிட்டாரு! இயக்குனர் விக்ரமனின் வெற்றியும் தோல்விகளும்!..

இரு பெரும் துருவங்களுக்கிடையில் ஒரு புதுமுக நடிகர் என்றால் மக்கள் யாரை பார்ப்பார்கள்? இருந்தாலும் துணிந்து இறங்கினார் ஜெய்சங்கர். வெற்றியும் கண்டார். அறிமுகப்படத்திலேயே ஒரு நல்ல வெற்றி ஜெய்சங்கருக்கு கிடைத்தது. தொடர்ந்து, எங்க வீட்டு பெண், பஞ்சவர்ண கிளி படங்களில் நடித்தார்.

எத்தனையோ படங்களில் நடித்தாலும் யார் நீ? திரைப்படம்தான் ஜெய்சங்கர் வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படமாக அமைந்தது. ஒரு சைக்காலாஜிக்கல் திரைப்படமாக இது அமைந்ததனால் பின்னாளில் பல துப்பறிவாளன் கதாபாத்திரம் உள்ள படங்களில் ஜெய்சங்கர் நடிக்க முன்னோட்டமாக அமைந்தது.

இதையும் படிங்க: கோட் சூட் போட ஆசைப்பட்டு கோட்டை விட்ட ராமராஜன்!.. பசுநேசனின் உச்சமும் வீழ்ச்சியும்!…

அவர் இருக்கிற வரைக்கும் மற்றவர்களுக்காக எதாவது உதவிகளை செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலேயே இருந்தவர். இதையே அவருடைய மகன்களுக்கும் சொல்லி வளர்த்திருக்கிறார் போல. ஜெய்சங்கரின் மகன்களில் ஒருவரான விஜய் சங்கர் சென்னையில் பிரபல கண் மருத்துவராக இருக்கிறார். அவர் மூலம் அஜித் ஏகப்பட்டோருக்கு உதவிகளை செய்திருக்கிறார்.

விஜய் சங்கரின் பணிக்காலம் 25 வருடங்கள் ஆகிவிட்டதாம். இதுவரைக்கும் இலவசமாக பல ஆயிரத்திற்கும் மேலானவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறாராம். இது அப்பாவின் கனவு என்றும் விஜய் சங்கர் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: கடும் அப்செட்டில் விஜய்! பூஜை போடுறதுக்கு முன்னாடியே தளபதி 69ல் நடந்த அக்கப்போரு

Published by
Rohini