Categories: Cinema News latest news throwback stories

சசிகுமார் கூட சேர்ந்ததுனால படம் பிளாப் ஆயிடிச்சு… ஷாக் கொடுத்த ஜெய்.!

சென்னை 28 திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு சுப்ரமணியபுரம் படத்தில் நல்ல நடிகராக அறியப்பட்டவர் நடிகர் ஜெய். அதன் பிறகு கோவா, எங்கேயும் எப்போதும் , ராஜா ராணி ஆகிய படங்களின் மூலம் அவ்வப்போது ஹிட் கொடுத்து நல்ல நடிகராக அறியப்பட்டு வருகிறார் ஜெய்

 

இவர் நடிப்பில் கடைசியாக சென்னை 28 இரண்டாம் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வில்லனாக பட்டாம்பூச்சி எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சுந்தர் சி நாயகனாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்காக நேர்காணலில் அண்மையில் ஜெய் கலந்துகொண்டார். அப்போது பல்வேறு விஷயங்களை பகிர்ந்துகொண்டார். அதில் ஆரம்பித்தில் சென்னை 28 , கோவா போன்ற பண்டங்களில் நடித்தீர்கள். ஆனால், அவள் பெயர் தமிழரசி, கனிமொழி போன்ற படங்களிலும் நடித்தீர்கள் ஆனால் சரியாக போகவில்லை என கேட்கபட்ட போது,

இதையும் படியுங்களேன் –  விஜய்க்கும் வேளாங்கண்ணிக்குமான தொடர்பு.! அதுவும் அந்த சம்பவத்தை மறக்கவே முடியாதாம்…

நான், அந்த சமயம் சுப்ரமணியபுரம் இயக்குனர் சசிகுமார் உடன் சுமார் ஒன்றரை வருடம் பயணித்தேன். அதனால், என் கவனம் கமர்சியல் பக்கம் செல்லவில்லை. வித்தியாசமான நல்ல கதைக்களங்களை தேர்வு செய்தேன். ஆனால் அது சரியாக ஒர்க்அவுட் ஆகவில்லை. என வெளிப்படையாக பேசியிருந்தார் நடிகர் ஜெய்.

Manikandan
Published by
Manikandan