ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்திய நிலையில் உச்சி குளிர்ந்த கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்துக்கு செக் கொடுத்த புகைப்படம் வெளியாகி பலருக்கும் புளியை கரைக்க வைத்து விட்டது.
அத்துடன் நிற்காமல் ரஜினி வீட்டு வாசலுக்கே சொகுசு காரை கொண்டு வந்து இறக்கி ஷாக்கிங் சர்ப்ரைஸை கொடுத்து விட்டார். உடனே ரஜினிக்கும் மட்டும் தான் கலாநிதி மாறன் கவனிக்கிறாரு, நெல்சனை கழட்டி விட்டுட்டார் என விஜய் ரசிகர்கள் வயித்தெரிச்சலில் கம்பு சுத்தி வந்த நிலையில், உடனடியாக அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நெல்சனையும் வெயிட்டாக கவனித்துள்ளார் கலாநிதி மாறன்.
இதையும் படிங்க: குஷி விமர்சனம்: புருஷன் பொண்டாட்டியா விஜய்யும் சமந்தாவும் பர்ஃபெக்ட்டா இருக்காங்களே!..
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், தமன்னா, சிவராஜ்குமார், மோகன்லால், விநாயகன், ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, வசந்த் ரவி உள்ளிட்ட பலர் நடித்த ஜெயிலர் படத்தை இயக்கி கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியிட்டு இருந்தார் இயக்குநர் நெல்சன்.
வெளியானதில் இருந்து படம் ஜெட் வேகத்தில் உலகம் முழுவதும் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்த ஆரம்பித்தது. சன் பிக்சர்ஸ் இதுவரை பார்க்காத வசூல் வேட்டையை ஜெயிலர் திரைப்படம் அள்ளிக் கொடுக்க கலாநிதி மாறன் சந்தோஷத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.
இதையும் படிங்க: ரொம்ப சீன போடாதீங்க… இதுக்காக தான் இந்த பில்டப்பா? நெல்சன், அட்லீயின் பேச்சை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
நடிகர் ரஜினிகாந்துக்கு 1.51 கோடி மதிப்பிலான BMW X7 சொகுசு காரை பரிசாக வழங்கினார். மேலும், செக் ஒன்றையும் வழங்கிய நிலையில், 100 கோடிக்கான செக் என தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், இயக்குநர் நெல்சனையும் விட்டு விடாமல், இப்படியொரு வெற்றிக்கு உங்கள் தரமான இயக்கம் தான் காரணம் என நெல்சனையும் அழைத்து பெரிய தொகையுடன் கூடிய செக் ஒன்றை தற்போது கலாநிதி மாறன் கொடுத்துள்ளார்.
அடுத்து நெல்சனுக்கும் ஒரு பிரம்மாண்ட சொகுசு கார் பரிசாக வழங்கும் வீடியோ வரும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். நடிகர் விஜய்யை வைத்து சன் பிக்சர்ஸில் நெல்சன் இயக்கிய பீஸ்ட் படத்துக்கு இப்படியெல்லாம் கொண்டாட்டம் இல்லையே என்று ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்களை வச்சு செய்து வருகின்றனர்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…