Connect with us

Cinema News

ரொம்ப சீன போடாதீங்க… இதுக்காக தான் இந்த பில்டப்பா? நெல்சன், அட்லீயின் பேச்சை வச்சு செய்யும் நெட்டிசன்கள்!

விஜய் நடிப்பில் உருவாகும் படங்களுக்கு பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தோல்வி என்பதே சமீபகாலமாக இல்லை. விமர்சன ரீதியாக மோசமாக விமர்சிக்கப்பட்ட பீஸ்ட் படத்திற்கு கூட வசூல் யார் கையையுமே கடிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். அப்படி ஒரு வசூல் மன்னனாக இருக்கிறார்.

தற்போது லியோ படத்தின் வேலைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் படத்தின் வியாபாரம் 500 கோடியை நெருங்கி இருக்கிறது. இதனால் பட ரிலீஸ் மீது இப்போதே பலரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இதை தொடர்ந்து கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் தளபதி68 படத்தின் வேலைகளில் இணைந்து இருக்கிறார்.

இதையும் படிங்க : அப்பாவை விட அஜித் தான் கெத்து… தடாலடியாக பதில் சொன்ன ஜேசன் விஜய்.. கடுப்பான ரசிகர்கள்!

அதை தொடர்ந்து அடுத்த படத்தினை இயக்க போவது அட்லியா, வெற்றிமாறனா என பல தரப்பில் இருந்தும் பேச்சுக்கள் இப்போதே அடிப்பட துவங்கி விட்டது. இது ஒரு பக்கம் இருக்க இளம் இயக்குனர்களான நெல்சனும், அட்லியும் விஜயை தொடர்ச்சியாக பாராட்டுவது தற்போது இணையத்தில் பேசுபொருளாகி இருக்கிறது.

ஜெய்லர் ஆடியோ ரிலீஸில் ரஜினியிடம் கதை சொல்லி என்னை என்கரேஜ் செய்ததே விஜய் தான். அவரால் தான் நான் ரஜினியிடன் சென்று கதை சொன்னேன் எனக் கூறினார். சொல்லி வைத்த மாதிரி ஜவான் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் பேசிய அட்லீ தனது பேச்சில் பல முறை விஜய் பற்றி பேசினார். ஷாருக்கானிடம் நான் தைரியமாக கதை சொல்லி இருந்தால் அது விஜயால் தான் என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : லியோ ரிலீசுக்கு அழைக்கப்பட்ட முன்னணி நடிகர்கள்… ஆப்பை நாங்களே வச்சிக்குவோம? போங்கப்பபா!

ஆனால் இவர்கள் ஒரு பக்கம் விஜய் ஒரு மல்டி ஸ்டார் என்பதால் கூட அவரை விட்டு விடக்கூடாது என்பதற்காக தான் இப்படி பேசுகிறார்கள் என பலரும் இணையத்தில் கிசுகிசுக்க தொடங்கி இருக்கின்றனர். விஜய் எப்போதுமே எல்லா இயக்குனர்களிடமும் நட்பாக இருப்பவர்.

அந்த முறையில் பீஸ்ட் படப்பிடிப்பில் நெல்சனிடம் சொல்லி இருக்கலாம். அவரை ஒப்பிடும் போது அட்லீ மீது தான் விஜயிற்கு உண்மையான பாசம் உண்டு. அதனால் தான் அட்லீக்கு தொடர் வாய்ப்புகள் கிடைக்கிறது. இதை புரிந்துகொண்ட அட்லீ அதனால் எப்போதுமே விஜயை பற்றியே பேசி வருவதாக கூறுகின்றனர்.

google news
Continue Reading

More in Cinema News

To Top