Categories: Cinema News latest news

லட்டுல வச்சனு நினைச்சியா.. நட்டுல வச்சேன்டா.. ஜேசன் சஞ்சய் விஷயத்தில் அஜித்தின் ஆடுபுலி ஆட்டம்…

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது லைகா நிறுவனத்தின் கீழ் இயக்குனராகி இருக்கிறார். அவரது வருகைக்கு பல தரப்பில் பாராட்டுக்ள் தெரிவிக்கப்பட்டாலும் இன்னும் சர்ச்சைகளும் விஜயை சுற்றி ஜேசனை சுற்றி கிசுகிசுப்பாக எழுந்து இருக்கிறது. இதில் அஜித்தின் பெயரும் அடிப்பட்டு வருவது தான் மிகப்பெரிய ஆச்சரியமான விஷயமாக மாறி இருக்கிறது. 

அஜித்தும் விஜயும் திரை வட்டாரத்தில் விக்ரம் வேதா போல முட்டுக்கொண்டு திரிவதாகவே ஒரு பிம்பம் இன்றும் கோலிவுட்டில் வலம் வருகிறது. அதற்கு ஏற்ப அவரின் ரசிகர்களும் மாற்றி மாற்றி அடித்துகொண்டே இருப்பார்கள். ஆனால் தற்போது ஜேசன் அஜித்தின் நிழலில் சரண்டர் ஆகி இருப்பதாக ஒரு தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

இதையும் படிங்க : சைனிங் உடம்பு சும்மா அள்ளுது!.. பளபள மேனியை காட்டி பாடாப்படுத்தும் ஷிவானி!…

ஆனால் விஜயை வெறுப்பேற்ற நினைத்த ஜேசன் அஜித்தின் கூடாரத்தில் தான் தற்போது இருக்கிறாராம். ஜேசனுடன் விஜய் பேசுவது இல்லை என ஒரு தகவல். இதனால் கடுப்பான ஜேசன் எல்லா இடங்களிலுமே அஜித்தை தூக்கி பேசுகிறாராம். மேலும் சுரேஷ் சந்திரா தான் இந்த படத்தின் பிரஸ் ரிலீஸை வெளியிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படத்தினை குறித்து பேசும்போது முதலில் ஜேசன் லைகாவிற்கு எந்தகதையையும் சொல்லவில்லையாம். அவர் மூன்று ஒன்லைனை மட்டுமே சொன்னதாக சொல்கிறார்கள்.  மேலும், அவர் சொன்ன ஒன்லைன் மூன்றுக்குமே லைகா நிறுவனம் ஓகே சொல்லி இருக்கின்றனர். அவருக்கு தமிழ் தெரியாத காரணத்தால் துணையாக தமிழ் தெரிந்த மூன்று அசோசியேட் இயக்குனர்கள் இணைகின்றனர்.

இதையும் படிங்க : 5 வருஷமா குப்பை கொட்டியும் கண்டுக்காத இளையராஜா – கைகொடுத்து தூக்கிய இசைப்புயல்

இதன்மூலம் கதையை முடிக்க உதவியாக இருப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மூன்றில் ஒரு கதை அஜித், இன்னொனு விஜய் சேதுபதிக்கும் மற்ற கதை அனிருத்துக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் இந்த ஒன்லைனுக்கு விரைவில் கதை முழுதாக முடித்துவிடுவேன் எனவும் உறுதி அளித்துள்ளார். 

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily