Categories: Cinema News latest news

விஜய் – அஜித்தை ‘அந்த’ விஷயத்தில் ஃபாலோ செய்யும் ஜெயம் ரவி.! இத சிவகார்த்திகேயனே செஞ்சிட்டாரே…

சினிமா பிரபலங்களுக்கு முன்னர் போயஸ் கார்டன் பகுதியில் வீடு வாங்குவது ஒரு கனவாக இருந்தது. ஏனென்றால் அங்கு தான் மிக முக்கிய பிரபலங்கள் ரஜினிகாந்த் உட்பட பலர் அங்கு இருக்கின்றனர்.

ஆனால், தற்போது முன்னணி நடிகர்களே சிட்டியை விட்டு தள்ளி வெகு தூரம் கழித்து வீடு வாங்கி அங்கே செட்டில் ஆகிவிடுகின்றனர். ஏற்கனவே விஜய், அஜித் போன்ற உச்ச நட்சத்திரங்கள் சென்னையை அடுத்த இசிஆர் எனப்படும் கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை பகுதிகளில் வீடு கட்டி குடியேறிவிட்டனர்.

ஏன், அண்மையில் கூட சிவகார்த்திகேயன் ஈசிஆர் பக்கம் வீடு வாங்கி செட்டிலாகிவிட்டார். தற்போது விஜய் , அஜித்தை பாலோ செய்துள்ளார் ஜெயம் ரவி. அவரும் நீலாங்கரையில் வீடு வாங்கி உள்ளாராம்.

இதையும் படியுங்களேன் – ஆயிரத்தில் ஒருவன் 2 வேண்டாம்.. செல்வராகவனை அப்செட் ஆக்கிய தனுஷ்.. சோகத்தில் ரசிகர்கள்…

ஏற்கனவே ஜெயம் ரவி போயஸ் கார்டனில் வீடு வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது சிட்டி  நெரிசல் வாழ்க்கை வேணாம் என முடிவு எடுத்து சிட்டியை விட்டு ஒதுங்கிவிட்டார்கள் போலும்.

Manikandan
Published by
Manikandan