Categories: Cinema News latest news

சாதிக்குமா சைரன்!.. அடேங்கப்பா இத்தனை தியேட்டர்ல ரிலீஸ் ஆகுதா?.. சோலோவாக கல்லா கட்டுவாரா ஜெயம் ரவி?

இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ளது சைரன் 108 திரைப்படம்.

பிப்ரவரி 16-ஆம் தேதியான நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் இந்த படம் வெளியாகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்ட இந்த படம் ரிலீஸ் தள்ளிப்போய் நாளை வெளியாகிறது.

இதையும் படிங்க: கண்ணுக்குள்ளே நிக்கிறாரே கவின்!.. ஸ்டார் படத்தின் அட்டகாசமான ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!..

இந்த படத்தில் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் வயதுக்கு வந்து மகளுக்கு தந்தையாக நடித்திருக்கிறார் ஜெயம் ரவி. பிளாஷ்பேக் போர்ஷனில் ஜெயம் ரவியின் மனைவியாக பிரேமம் படத்தில் நடித்து பிரபலமான அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். கீர்த்தி சுரேஷ் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக வித்தியாசமான தோற்றத்தில் மிரட்ட காத்திருக்கிறார்.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான சாணிக் காயிதம் படத்தில் பொன்னி என்னும் கான்ஸ்டபிளாக நடித்திருந்த கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்தில் புரோமோஷன் ஆகியுள்ளார்.

இதையும் படிங்க: ஜெயிலர் மருமகளா இது?.. வயித்துப் புள்ளத்தாச்சியா டான்ஸிங் ரோஸ் கூட என்ன பண்றாரு பாருங்க!..

கடந்த ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான அகிலன் மற்றும் இறைவன் உள்ளிட்ட படங்கள் சுமாருக்கும் குறைவாக ஃபிளாப் படங்களாக மாறின. பொன்னியின் செல்வன் 2 படமும் ரசிகர்களை பெரிதாக கவரவில்லை. இந்நிலையில், சைரன் படத்தின் மீது ஜெயம் ரவி ரொம்பவே பெரிய நம்பிக்கை வைத்திருக்கிறார்.

வடக்குப்பட்டி ராமசாமி 600 பிளஸ் ஸ்க்ரீன்களில் வெளியான நிலையில், சுமார் 1000 ஸ்க்ரீன்களில் ஜெயம் ரவியின் சைரன் நாளை வெளியாகிறது. சிவகார்த்திகேயன், தனுஷ், ரஜினிகாந்த், சந்தானம், ஆர்ஜே பாலாஜி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்த படங்கள் அனைத்துமே பெரிதாக ஓடாத நிலையில், ஜெயம் ரவியாவது கல்லா கட்டுவாரா என்பதை பார்க்க ஒட்டுமொத்த கோலிவுட் சினிமாவும் காத்திருக்கிறது.

Saranya M
Published by
Saranya M