Categories: Cinema News latest news

சந்திரமுகி 2 எஃபெக்ட்!.. முதல் நாளில் கல்லா கட்டாத ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.. வசூல் இவ்ளோ தானா?..

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா நடித்துள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நேற்று வெளியானது. படத்திற்கு விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை நிறைய பாசிட்டிவ் விமர்சனங்கள் கொடுத்திருந்தாலும், ராகவா லாரன்ஸ் படத்தை காஞ்சனா படங்களை கொண்டாடியது போல மக்கள் தியேட்டருக்கு சென்று பார்ப்பதை தவிர்த்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே இந்த ஆண்டு அவர் பண்ண பெரிய சம்பவங்களான ருத்ரன் மற்றும் சந்திரமுகி 2 தான். ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி படம் மிகப்பெரிய வெற்றி அடைந்த நிலையில், சந்திரமுகி 2 படம் நல்லா இருக்கும் என நினைத்து தியேட்டருக்கு சென்ற ரசிகர்களை போதும் போதும் என்கிற அளவுக்கு அழ வைத்து அனுப்பிய தண்டனை தான் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் எதிரொலித்துள்ளது.

இதையும் படிங்க: விஜய்க்கு ஷாருக்கான் செய்து கொடுத்த சத்தியம்!.. ஜவான் உருவானபோது இவ்வளவு நடந்துச்சா!..

பெரிய நடிகர்கள் நடித்திருந்தாலும் படத்தின் முதல் நாள் வசூலே வேறலெவலில் இருந்திருக்கும். ஆனால், ராகவா லாரன்ஸ் படம் என்பதால் வெறும் 1.75 கோடி ரூபாய் தான் உலகளவில் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

வேர்ட் ஆஃப் மவுத் அந்த படத்துக்கு உள்ள நிலையில், இன்றும் தீபாவளியான நாளையும் தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆனால் தான் படத்தின் பட்ஜெட்டையாவது வசூல் செய்ய முடியும் எனக் கூறுகின்றனர்.

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கே இந்த நிலைமைன்னா கார்த்தியோட ஜப்பான் படத்தை சொல்லவா வேண்டும்!

இதையும் படிங்க: ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் பெண்ணோ!.. ஷிவானி சும்மா ஜிவ்வுன்னு இழுக்குறாரே!..

Saranya M
Published by
Saranya M