×

சிகரெட்டை கேட்டு வாங்கி தம் அடித்த ஜூலி - கிழித்து தொங்கவிட்ட ஸ்டூடியோ ஓனர்!

நம் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆன ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல் மூன்று சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை. இருந்தும் அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார்.

 

இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே ஜூலி வித விதமான போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். இது குறித்து கூறியுள்ள அந்த ஸ்டூடியோ ஓனர் பிரியா என்ற பெண்,  " முழு விருப்பத்துடன் பங்கேற்று இஷ்டப்படி போஸ் கொடுத்த ஜூலி இடையில் சிகரெட் கிடைக்குமா என்று கேட்டு வாங்கி தம் அடித்தாராம். உடனே நங்கள் போட்டோ எடுப்பதை நிறுத்தினோம். ஆனால் அவரோ பரவாயில்லை அப்படியே எடுங்கள் என்று கூறி தம் அடித்துக்கொண்டே போஸ் கொடுத்தாராம்.

போட்டோ ஷூட் முடிந்ததும் திடீரென போன் செய்து நான் சொல்லும் போடோக்களை மட்டும் தான் வெளியிட வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது.. போட்டோ ஷூட் முடிந்தது இனி உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.  நான் விருப்பப்படும் புகைப்படத்தை வெளியிடுவேன் அதில் நீங்கள் தலையிட வேண்டாம் என்று சொன்னதும் அவர் வக்கீல் வைத்து மிரட்டி கோர்ட்டுக்கு போவேன் என்று கூறினாராம். என அந்த ஸ்டூடியோ ஓனர் பிரியா கூறியுள்ளார். ஆக இன்னும் ஜூலியை வச்சு செய்வதற்கு  தரான சம்பவங்கள் எதிர்பார்க்கலாம்.

From around the web

Trending Videos

Tamilnadu News