நடிகரா வரலை... ரெண்டு பேரை இழந்த குடிமகனா வந்திருக்கேன்... கண்ணீர்விட்ட முன்னணி நடிகர்

டோலிவுட்டின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ஜூனியன் என்.டி.ஆர் சைபராபாத் போக்குவரத்து போலீஸார் நடத்திய விபத்து குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியது பலரைக் கலங்கவைத்தது. நெகிழ்ச்சியுடன் கண்கலங்கியபடி பேசிய ஜூனியர் என்.டி.ஆர், ``நான் இங்கு ஒரு நடிகராக வரவில்லை. ஆனால், குடும்ப உறுப்பினர்கள் இரண்டு பேரை சாலை விபத்துகளில் பறிகொடுத்த சாதாரண குடிமகனாக இங்கு வந்திருக்கிறேன். சாலைவிதிகளைக் கடைபிடித்து நடப்பது மிகவும் முக்கியமானது. நமது உயிரைக் காப்பது அதுவே’’ என்று பேசினார்.
ஜூனியர் என்.டி.ஆரின் மூத்த சகோதரர் நந்தமுரி ஜானகி ராம் கடந்த 2014ம் ஆண்டி டிசம்பர் மாதம் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். அதேபோல், தந்தையும் மூத்த நடிகருமான நந்தமுரி ஹரிகிருஷ்ணாவை 2018ம் ஆண்டு ஆகஸ்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் இழந்தார். ஒவ்வொரு நிகழ்ச்சியின்போதும் தனது ரசிகர்களை முறையாக சாலை விதிகளைக் கடைபிடித்து வாகனங்களை இயக்குமாறு கேட்டுக்கொள்வது ஜூனியர் என்.டி.ஆரின் வழக்கமாகும்.