Categories: Cinema News latest news

ஸ்பைடர்மேன் படத்துல நடிக்கப்போறாரா ஜோதிகா?.. என்னம்மா தாவுறாரு!.. வேறலெவல்ங்க நீங்க!..

நடிகை ஜோதிகா சூர்யாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் சினிமாவிலிருந்து நடிப்பதை நிறுத்திக் கொண்டார். குழந்தைகள் சற்று பெரியவர்கள் ஆன பின்னர், மீண்டும் 36 வயதினிலே படத்தின் மூலம் சினிமாவில் நடிக்கத் தொடங்கினார் ஜோதிகா. அந்த படம் அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்த நிலையில், தொடர்ந்து பெண்களை மையப்படுத்திய படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது மலையாளம், இந்தியென அனைத்து விதமான படங்களிலும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும் இணைந்து நடித்து வருகிறார் ஜோதிகா.

இதையும் படிங்க: அந்த பாட்டை எழுதினது வைரமுத்து இல்ல!.. ஏ.ஆர்.ரஹ்மானாம்!.. என்னப்பா சொல்றீங்க!…

அதற்கு ஏற்றவாறு தனது உடம்பையும் கட்டுக்கோப்பாக மாற்ற கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே ஒருமுறை ஜிம்மில் தீவிரமாக பயிற்சி பெரும் வீடியோவை ஜோதிகா வெளியிட்டு சூர்யாவுக்கு டஃப் கொடுத்திருந்தார்.

இந்நிலையில் அதைவிட வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதுக்கு ஸ்பைடர் மேன் போல பல இடங்களுக்கு தாவுவது, அதிக எடையுள்ள பொருட்களை தூக்குவது என இளம் ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு மிகவும் தீவிரமான உடற்பயிற்சிகளை சர்வ சாதாரணமாக செய்து மாஸ்க் காட்டுகிறார்

இதையும் படிங்க: விக்ரமுடன் அஜித் நடிக்க வேண்டிய படம்!.. மிஸ் ஆனது இதனால்தான்!.. இயக்குனர் சொன்ன சீக்ரெட்!..

ஜோதிகா நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியுள்ள அஜய் தேவ்கன் மற்றும் மாதவன் நடித்துள்ள சைத்தான் திரைப்படம் வரும் மார்ச்8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. டப்பா கார்ட்டில் எனும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தொடரிலும் ஜோதிகா நடித்துள்ளார். அந்த வெப் சீரிஸும் வெளியாக காத்திருக்கிறது.

இந்த வீடியோவை காண கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யுங்க..

https://www.instagram.com/reel/C4ImrqYS4LB/

Saranya M
Published by
Saranya M