×

தோனியின் பெயரை சொல்லாத கே எல் ராகுல் ; கொதித்தெழுந்த ரசிகர்கள் !

மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய கே எல் ராகுல் அந்த சூழ்நிலையில் தன்னைப் பொருத்திக் கொள்ள சில வீரர்களின் வீடியோக்களைப் பார்த்ததாகக் கூறியுள்ளார்.

 

மிடில் ஆர்டரில் சிறப்பாக விளையாடிய கே எல் ராகுல் அந்த சூழ்நிலையில் தன்னைப் பொருத்திக் கொள்ள சில வீரர்களின் வீடியோக்களைப் பார்த்ததாகக் கூறியுள்ளார்.

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவும் இரண்டாவது போட்டியில்  இந்திய அணியும் வெற்றி பெற்றன. இதில் இரண்டாவது போட்டியில் தொடக்க ஆட்டக்காரர் கே எல் ராகுல் 5 ஆவது இடத்தில் இறங்கி 52 பந்துகளில் 80 ரன்களை சேர்த்து ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்நிலையில் நடுவரிசையில் இறங்கி சிறப்பாக விளையாடுவது குறித்து பேசும்போது ‘நடுவரிசையில் சிறப்பாக விளையாட நியுசிலாந்தின் கேன் வில்லியம்சன் மற்றும ஆஸியின் ஸ்மித் ஆகியோரின் வீடியோக்காளைப் போட்டு பார்த்தேன். அவர்கள் எப்படி அந்த சூழ்நிலையை தங்களுக்கு ஏற்றவாறு மாற்றுகின்றனர் என கவனித்து ஆடினேன்’ எனக் கூறியுள்ளார்.

ராகுலின் இந்த பேச்சை அடுத்து ‘உலகிலேயே சிறந்த நடுவரிசை ஆட்டக்காரர் எனப் பெயர் பெற்ற தோனியின் வீடியோவை ஏன் பார்க்கவில்லை’ என ரசிகர்கள் அவருக்குக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News