×

ஜியாகரபி தெரியுமா... மாஸ்டர் கிண்டலுக்குப் பதில்கொடுத்த `காதல்கோட்டை’ இயக்குனர் 

சமீபத்தில் வெளியாகி ஹிட்டடித்த மாஸ்டர் படத்தில் அஜித்தின் காதல் கோட்டை படத்தைக் கிண்டலடித்து வசனம் இடம்பெற்றிருந்ததாக சர்ச்சை எழுந்தது. 
 
ஜியாகரபி தெரியுமா... மாஸ்டர் கிண்டலுக்குப் பதில்கொடுத்த `காதல்கோட்டை’ இயக்குனர்

விஜய் - விஜய் சேதுபதி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படம் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்தது. படத்தில் மாஸ்டராகக் கலக்கியிருப்பார் விஜய். அவரது கதாபாத்திர வடிவமைப்பும் விஜய் ரசிகர்கள் தாண்டி பல்வேறு தரப்பு ரசிகர்களையும் ஈர்த்தது. 

படத்தில் தன்னுடைய பின்புலத்தைக் கேட்பவர்களிடமெல்லாம் ஏதாவது ஒரு படத்தின் கதையைச் சொல்லித் தப்பிப்பது போல ஹீரோ விஜய்யின் கேரக்டர் வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்படி ஒரு முறை அஜித் நடித்த காதல் கோட்டை படத்தைச் சொல்லுவார். அந்த சீனில், `ராஜஸ்தானில் ஸ்வெட்டரா? நம்புற மாதிரியா இருக்கு’ என்ற வசனம் காதல் கோட்டை படத்தைக் கிண்டல் செய்யும் தொனியில் இடம்பெற்றதாகச் சர்ச்சை எழுந்தது. 

இதுகுறித்து பேசிய காதல்கோட்டை இயக்குனர் அகத்தியன், ``ராஜஸ்தானுக்கு ஒருமுறை நேரடியாகப் போய்ப் பார்த்தால்தான் அது தெரியும். பகலில் வெயில் சுட்டெரிக்கும். அதேபோல், இரவில் கடுங்குளிராக இருக்கும். ஹீரோயினும் ஊட்டியில் இருப்பதுபோல கதை இருக்கும். இரண்டு இடங்களுமே குளிர் அதிகம் இருக்கும் இடம் என்பதால், ஸ்வெட்டர் இயல்பாகப் பொருந்திப் போகும். அதைக் கிண்டல் செய்பவர்களுக்கு ஜியாகரபி தெரியவில்லை என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News