Categories: Cinema News latest news

என்னது கைதி ‘ஹீரோ’ விக்ரமில் நடிச்சிருந்தாரா.?! லோகேஷ் செய்த வேலையால் கடுப்பான ரசிகர்கள்.!

சமீபத்தில் வெளியாகி, இந்தியா முழுக்க மாபெரும் வெற்றி அடைந்து வரும் திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கமல்ஹாஸன், பகத் பாஸில், விஜய் சேதுபதி என பலர் நடித்துள்ளனர். சூர்யா மிரட்டலான கௌரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்த திரைப்படம் இதுவரை சுமார் 260 கோடி ரூபாயை தாண்டி வசூல் செய்து வருகிறது. இந்த வாரம் இறுதியில் இன்னும் அதிகமாக வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படம் பற்றி அண்மையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேர்காணலில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது இந்த படத்தில் கைதி படத்தில் வரும் கதாபாத்திரங்களை கொண்டு காட்சிகள் இதில்  எடுக்கப்பட்டன.

இதையும் படியுங்களேன் – ஏய் ஊர்வசி இங்க வாடி.. ஷூட்டிங் ஸ்பாட்டில் அத்துமீறிய ஆர்.ஜே.பாலாஜி.!

அப்போது, நரேன், தீனா , காட்சிகள் போலவே ஜார்ஜ் மரியன் (கான்ஸ்டபிள் நெப்போலியன் ) அவர்களின் காட்சியும் எடுக்கப்பட்டது. கைதி இறுதிக்காட்சியில் அந்த பெரிய துப்பாக்கியை தூக்கி சுடுவது போல இருக்கும். அந்த துப்பாக்கியை இவர் எப்படி ஒற்றை ஆளாக தூக்கி சுட்டார் என இவர் மனித உரிமை ஆணையத்திடம் விளக்கம் அளிப்பது போல அந்த காட்சி எடுக்கப்பட்டது.

ஆனால், படத்தின் நீளம் கருதி அந்த காட்சி அப்படியே நீக்கப்பட்டு விட்டது. என லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். உண்மையில் கைதி படத்தில் ஹீரோ என்று பார்த்தால் ஜார்ஜ் மரியன் தான். கைதி இசை வெளியீட்டு விழாவின் போது கூட கதாநாயகன் கார்த்தி, ஜார்ஜ் மரியன் சார் தான் இப்படத்தின் ஹீரோ, ஆனா அதுவே தெரியாமல் நடித்து இருப்பார். என்று வெளிப்படையாக கூறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan