×

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால்? ஹேப்பி மூடில் கணவர்!

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால்? ஹேப்பி மூடில் கணவர்!
 
kajal

இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் பல்வேறு ஹிட் படங்களில் நடித்து டாப் நடிகையாக சிறந்து விளங்கி வரும் நடிகை காஜல் அகர்வால்  2004ஆம் ஆண்டு ஹோ கயா நாவில்  நடிகையாக அறிமுகமானார். அதையடுத்து 2007ல் லட்சுமி கல்யாணம் என்ற திரைப்படத்தின் மூலமாகத் தெலுங்கு சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். 

தமிழில்  2008ஆம் ஆண்டு வெளிவந்த பழனி படத்தின் மூலம் தடம் பதித்தார். அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு படங்கள் ஓடவில்லை. பின்னர் 2009ஆம் ஆண்டு இவர் நடித்த மகதீரா மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது. தமிழில்நான் மகான் அல்ல,  துப்பாக்கி, ஜில்லா, மாரி, விவேகம் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 

kajal

கடந்த ஆண்டு கெளதம் கிச்சுலு என்ற தொழிலதிபரை திருமணம் செய்துக்கொண்ட காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் கூறுகிறது. காரணம் அம்மணி புதிய படங்கள் எது வந்தாலும் எந்த காரணத்தையும் கூறாமல் எடுத்த எடுப்பிலேயே நிராகரித்து விடுகிறாராம். விரைவில் குட் நியூஸ் சொல்லப்போகும் காஜலின் கணவர் கிச்சுலு செம குஷியில் இருக்கிறாராம். 
 

From around the web

Trending Videos

Tamilnadu News