Categories: Cinema News latest news

கல்கி டிக்கெட் புக்கிங்!.. சர்வரே திணறிடுச்சி!.. லியோ முதல் நாள் வசூல் ரெக்கார்டுக்கு ஆப்பா?..

வெளிநாடுகளில் கல்கி படத்தின் டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், நார்த் அமெரிக்காவில் அதிகப்படியான வசுல் வந்துவிட்டதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்தியாவில் இன்று டிக்கெட் புக்கிங் தொடங்கியது.

பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ள கல்கி படத்தின் டிக்கெட் புக்கிங் தெலுங்கு, ஹிந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளுக்கும் இன்று தொடங்கியது.

இதையும் படிங்க: சூப்பர் சிங்கர் 10 டைட்டில் வின்னர் இவர் தானா?.. டாப் 2 இடத்தை பிடித்த பெண் போட்டியாளர்கள்!..

டிக்கெட் புக்கிங் தொடங்கிய 10 நிமிடங்களிலேயே சர்வர் கிராஷ் என்கிற மெசேஜ் தான் அனைவருக்கும் வர ஆரம்பித்து விட்டது. தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்துக்கும் முதல் இரண்டு நாட்களுக்கு டிக்கெட் புக்கிங் செய்யவே முடியாமல் பல ரசிகர்கள் தவித்தனர்.

முதல் நாளில் அதிகப்படியான வசூலாக 148 கோடி வசூலை லியோ திரைப்படம் அள்ளியது. அதற்கு பின்னர் வெளியான பல பிரம்மாண்ட படங்கள் அந்த சாதனையை முறியடிக்க முடியாமல் திணறி வருகின்றன.

இதையும் படிங்க: அந்த நடிகையுடன் 15 நாள் பண்ணை வீட்டில் ஜாலி!.. கிலோ கணக்கில் நகை கொடுத்த நடிகர்..

இந்நிலையில், கல்கி திரைப்படம் நிச்சயம் முதல் நாள் வசூல் 175 கோடி ரூபாய்க்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகபட்சமாக 200 கோடி ரூபாய் வரை முதல் நாளே பிரபாஸின் கல்கி திரைப்படம் பெறும் என்றும் கணிப்புகள் வெளியாகியுள்ளன.

பாகுபலி படத்திற்கு பிறகு நிச்சயம் பிரபாஸுக்கு இந்த திரைப்படம் 1000 கோடிக்கும் அதிகமான வசூல் வேட்டையை நடத்திக் கொடுத்து புது இண்டஸ்ட்ரி ஹீட் படமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: கோட் படத்தில் பவதாரிணியை பாட வைத்தது ஏன்னு தெரியுமா? கனத்த இதயத்துடன் யுவன் சொன்ன தகவல்

Saranya M
Published by
Saranya M