Connect with us
nix

Bigg Boss

நிக்‌ஷனை பார்த்து சரியான கேள்வி கேட்ட கமல்! ஆடிப் போன ஹவுஸ் மேட்ஸ் – ஆண்டவரே எதிர்பார்க்கவே இல்ல

BiggBoss Kamal: விஜய் டிவியில் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். ஆறு சீசன்களை கடந்து ஏழாவது சீசனில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஓருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்று நாளுக்கு நாள் நிரூபித்து வருகிறார்கள்.

அதிலும் குறிப்பாக வைல்டு கார்ட் எண்டிரியாக உள்ளே நுழைந்த அர்ச்சனா வந்த பிறகு நாள்தோறும் நிகழ்ச்சி சூடுபிடித்திருக்கிறது. வந்த முதல் இரண்டு நாள்கள் அழுது கொண்டே ரசிகர்களை கடுப்பாக்கிய அர்ச்சனா அதன் பிறகு முழுவதுமாகவே மாறிப்போனார்.

இதையும் படிங்க: அந்த விஷயத்தில் கில்லாடி இளையராஜாதான்… அவரை அடிச்சிக்க ஆளே இல்லை..!

உள்ளே இருக்கும் அத்தனை பேரையும் பந்தாடி வருகிறார். அதிலும் கடந்த இரண்டு தினங்களாக அர்ச்சனாவிற்கும் நிக்‌ஷனுக்கும் இடையே நடந்த பனிப்போர் மிகவும் முற்றியிருக்கிறது. ஒரு கட்டத்தில் இருவரும் மாறி மாறி வார்த்தைகளை விட பார்க்கும் ரசிகர்களை பயப்பட வைத்திருக்கிறது.

வினுஷாவை பற்றி நிச்ஷனிடம் அர்ச்சனா கேட்க ஒரு கட்டத்தில் கோபமடைந்த நிக்‌ஷன் ‘என்ன வினுஷா வினுஷா வினுஷானு? இனிமேல் வினுஷாவை பத்தி யாராவது பேசுனீர்கள் என்றால் சொருகிடுவேன்’ என கூறினார்.

இதையும் படிங்க: 100 படத்தில் வடிவேலுவுடன் நடிக்க வந்த வாய்ப்பு! முடியவே முடியாது என மறுத்த நடிகை – காரணம் இதுதானா?

இந்த அச்சுறுத்தலான வார்த்தையை பயன்படுத்தியதற்காக இன்று நடக்கும் கமல் எபிசோடில் அர்ச்சனா போர்க்கொடி தூக்கியிருக்கிறார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக நிக்‌ஷனிடம் கமல் ‘என்ன நிக்‌ஷன் சொருகிடுவேனு சொன்னிங்களாமே? எங்க சொருகுவீங்க?’ என கேட்டு வயிறு, நெஞ்சு, வேட்டையாடு விளையாடு ஸ்டைலில் அவர் கண்ணை காட்டியும் கேட்டார்.

அதுமட்டுமில்லாமல் நீங்க சொருகும் இடம் எது தெரியுமா? என கேட்டுவிட்டி ஸ்டிரைக் கார்டை நீட்டுகிறார். அதனால் இன்று நடக்கும் எபிசோடு அனல்பறிக்கும் எபிசோடாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

இதையும் படிங்க: ‘சத்யா மூவீஸ்’ உருவான கதை … அந்தப் பேரு வந்ததுக்கு பின்னால் உள்ள ரகசியம் இதுதான்!

 

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Bigg Boss

To Top