Categories: Cinema News latest news

தக்லைஃப் படத்தில் மீண்டும் இந்த அவதாரமா? ஹிட் அடிக்குமா? லாஸ் ஆகுமா? கமலுக்கு காத்திருக்கும் சவால்…

Kamalhassan: தமிழ் சினிமாவில் உலகநாயகன் போடாத வேடங்களே இல்லை. நடிகராக மட்டுமல்லாமல் பல முகங்கள் காட்டி இருக்கிறார். அந்த வகையில் மீண்டும் ஒரு விஷயத்தினை தன்னுடைய தக் லைஃப் படத்தில் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் ரிலீஸான திரைப்படம் விக்ரம். இப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் அடுத்த படத்துக்கான ஆர்வம் ரசிகர்களிடம் இருந்தது. ஆனால் இந்தியன்2 படத்தின் ரிலீஸ் தொடர்ச்சியாக தள்ளி போய் கொண்டு இருக்கிறது.

இதையும் படிங்க: விஜய் ஆடிய போங்காட்டம்! தயாரிப்பாளரை எங்கு கொண்டு போய் நிறுத்தியிருக்கு பாருங்க

இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் தங்களை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கமலுடன் திரிஷா மற்றும் சிம்பு நடிப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் படத்தில் மீண்டும் இணைவதாக ஒரு தகவல் கசிந்திருந்தது.

இப்படத்தின் ஷூட்டிங் நடந்துவருகிறது. இதில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுடன் திரிஷா இணைந்து நடிக்கிறார். டெல்லியில் நடந்து கொண்டு இருக்கும் ஷெட்யூலுக்கு பின்னர் நடிகர் சிம்புவின் அறிமுகம் குறித்த அறிவிப்பு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஒரு பாடலை கமல்ஹாசன் எழுதி இருக்கிறாராம்.

இதையும் படிங்க: ரஜினியிடம் நடிகைக்கு இருந்த 43 வருட பகை!. கடைசி வரைக்கும் நடக்காமலே போயிடுச்சே!..

இப்பாடலின் கம்போசிங் இரண்டே மணி நேரத்தில் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது. எமோஷனல் பாடலாக உருவாகி இருக்கும் பாடல் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்கிறது படக்குழு. சமீபத்தில் வெளியான இனிமேல் ஆல்பம், விக்ரம் படத்தின் பத்தல பத்தல பாடலை கமல் எழுதி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Shamily