Categories: Cinema News latest news throwback stories

கமல் என்கிட்ட எதிர்பார்த்தது வேற… உலகநாயகன் ஆசையை நிராசையாக்கிய மனோபாலா!..

தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் மனோபாலா. தனது தனிப்பட்ட நகைச்சுவை காட்சிகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். ஆரம்பத்தில் சினிமாவிற்கு இயக்குனராக வேண்டும் என்கிற ஆசையில்தான் மனோபாலா வந்தார்.

ஆனால் அதில் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் அமையாத காரணத்தால் நகைச்சுவை நடிகனாக மாறினார். முதன் முதலாக இயக்குனர் பாரதி ராஜாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார் மனோபாலா. அந்த சமயத்தில் அவரை பாரதிராஜாவிடம் சேர்த்துவிட்டவர் நடிகர் கமல்ஹாசன் தான்.

Manobala

மனோபாலா சினிமாவிற்கு வந்தப்போது அவர் உதவி இயக்குனர் ஆவதற்கு முன்பே கமல்ஹாசனுடன் அவருக்கு பழக்கம் இருந்தது. எனவே அவருக்கு உதவுவதற்காக கமல்ஹாசன் பாரதிராஜாவிடம் பேசி மனோபாலாவை அவரிடம் சேர்த்து விட்டார்.

கமலின் ஆசை:

அப்போது தமிழ் சினிமாவில் மாற்று சினிமாவை கொண்டு வர வேண்டும் என்று கமல் ஆசைப்பட்டார். அதற்காக வெளிநாடுகளுக்கு சென்று வேறு வேறு மொழி திரைப்படங்களை பார்த்துள்ளார். அதன் மூலம் புதுவகையான படங்களை எப்படி எடுப்பது என கற்றுக்கொண்டார். இப்படி கமல்ஹாசன் வெளிநாட்டுக்கு செல்லும்போது மனோபாலாவையும் அழைத்து சென்றார்.

இதன் மூலம் மனோபாலாவும் கற்றுக்கொண்டு சரியாக படம் எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டார் கமல்.ஆனால் மனோபாலா இறுதி வரை கமர்ஷியல் படங்கள் எடுத்தாரே தவிர கமல் ஆசைப்பட்ட மாதிரி புது வித படங்களை எடுக்கவே இல்லை. இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இதையும் படிங்க: அந்த படத்தை காலி பண்ணதான் ரஜினி களம் இறங்கியிருக்கார்! – என்ன இப்படி சொல்லிட்டாங்க!…

Published by
Rajkumar