Connect with us

Cinema News

அந்த படத்தை காலி பண்ணதான் ரஜினி களம் இறங்கியிருக்கார்! – என்ன இப்படி சொல்லிட்டாங்க!…

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுக்கே போட்டி நடிகராக இருந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்தின் திரைப்பயணம் துவங்கிய நாள் முதல் இப்போது வரை பெரும் ஹிட் படங்களாக கொடுத்து வருகிறார். இறுதியாக போன வருடம் அவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தது.

அதற்கு பிறகு எந்த ரஜினி படமும் வரவில்லை. நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் தயாரானது. அந்த படமும்  நீண்ட நாட்கள் படப்பிடிப்பு நடந்ததால் இந்த வருடம் தான் வெளியாக இருக்கிறது. அதற்கு பிறகு ரஜினி இயக்குனர் ஞானவேல் இயக்கத்திலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் படம் நடிக்க இருக்கிறார்.

களம் இறங்கிய ரஜினி:

இதற்கு நடுவே தற்சமயம் லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மெய்தீன் பாய் என்ற அந்த கதாபாத்திரத்தின் போஸ்டர் தற்சமயம் வெளியாகி இருந்தது. இதற்கு கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர் அந்தனன் கூறும்போது சரியான சமயத்தில் ரஜினி இந்த போஸ்டரை வெளியிட்டுள்ளார்.

ஏனெனில் இப்போதுதான் கேரளா ஸ்டோரி என்கிற திரைப்படம் வெளியானது. அந்த திரைப்படம் இஸ்லாமிய வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக அமைந்தது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் மிகப்பெரும் ஆளுமையான ரஜினிகாந்த் ஒரு இஸ்லாமியராக நடித்து போஸ்டர் வெளியிடுவது அவர்களுக்கு ஆதரவான விஷயமாக இருக்கும்.

கேரளா ஸ்டோரி படத்திற்கு எதிராகவே இதை ரஜினி வெளியிட்டதாக தெரிகிறது என அந்தனன் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: எம்ஜிஆரின் படத்திற்கு எடிட்டிங் வேலை பார்த்த கமல்..இது எப்ப நடந்தது?.. என்ன படம் தெரியுமா?..

google news
Continue Reading

More in Cinema News

To Top