Categories: Cinema News latest news throwback stories

வில்லன் சத்யராஜிக்கு கமல் கொடுத்த சூப்பர் டிப்ஸ்… ஃபாலோ பண்ணிய விஜய் சேதுபதி

தமிழ்த்திரை உலகில் புரட்சித்தமிழன் என்று அழைக்கப்படுபவர் சத்யராஜ். கடலோரக்கவிதைகள் படத்தில் இயக்குனர் இமயம் பாரதிராஜா இவரை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார். சத்யராஜ் கமல் நடிப்பில் 3 படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.

காக்கிச்சட்டை, விக்ரம், சட்டம் என் கையில் படங்களைப் பார்த்தால் தெரியும். தகடு தகடு என்று அவர் பேசும் வசனம் இன்று வரை பிரபலம் தான். 80களில் இவர் வில்லனாக நடித்த பல படங்கள் அப்போது ட்ரெண்ட் செட்டாக இருந்தன.

SVJS

அவற்றில் ஒன்று தான் கமலின் சொந்தப் படமான விக்ரம். இந்தப் படத்தில் சத்யராஜின் வில்லன் அவதாரம் ரொம்பவே வித்தியாசமாக இருக்கும். இவர் அணிந்திருக்கும் கண்ணாடி தான் ஹைலைட். ஏன்னா அந்தக் கண்ணாடியில் ஒன்று கூலிங் கிளாஸ். மற்றொன்று சாதாரண கிளாஸ்.

என்ன இது புது மாடலா இருக்கே என அப்போது இளம் ரசிகர்கள் அந்த ஸ்டைலைப் புகழ்ந்தனர். அவரது வில்லத்தனத்தை ரொம்பவே ரசித்தனர். சத்யராஜ் ஏன் இப்படி ஒரு கெட்டப்புடன் இருந்தார் என்பது அதன்பிறகு தான் தெரிந்தது. இந்தப் படத்தில் அவரது ஒரு கண்ணில் கருவிழியே இருக்காது. அதை மறைக்கத் தான் அப்படி கூலிங் கிளாஸ் அணிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தன்னோட கருவிழி மூடியிருப்பதை அந்தப் படத்தின் ஒரு காட்சியில் கண்ணாடியைக் கழட்டுவார். அப்போது தான் நாம் பார்க்க முடியும். சத்யராஜிக்கு இந்த மாதிரி மாடலாகக் கண்ணாடி போடும் ஐடியாவை சொன்னதே கமல் தானாம். உலகநாயகன் என்றால் சும்மாவா. எப்போதும் வித்தியாசமாக சிந்திப்பவர் ஆயிற்றே. அவர் கொடுத்த ஐடியா சூப்பராக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. அதன்பிறகு சத்யராஜ் கண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் படங்களில் வித்தியாசம் காட்ட ஆரம்பித்தார்.

இதையும் படிங்க… கோட் படத்தில் நடித்த பிரசாந்துக்கு இத்தனை கோடி சம்பளமா?.. நம்பவே முடியலயேப்பா!…

வில்லாதி வில்லன் படத்தை சத்யராஜே இயக்கி நடித்தார். இந்தப் படத்தில் ஒரு கெட்டப்புக்கு கண்ணில் பூ விழுந்து இருக்கும். வில்லத்தனத்தில் சத்யராஜ் ரொம்பவே மிரட்டிய படம் நூறாவது நாள். அதை இப்போது பார்த்தாலும் மிரண்டு போவீர்கள்.

2022ல் உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியான படத்தில் மாஸாக வில்லத்தனம் காட்டியிருப்பார் விஜய் சேதுபதி. அவருக்கு லோகேஷ் கனகராஜ் இப்படித்தான் ஒரு கண்ணாடியைக் கொடுத்திருப்பார்.

 

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v