×

பிசுறு தட்டாமல் தன்னை போலவே ஆடிய ரசிகன் -  பாராட்டிய கமல் ஹாசன்!

தமிழ் சினிமா கண்டெடுத்த நடிப்பு ஜாம்பவான் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று வரை தனது வெற்றியை கொடுத்துக்கொண்டிருக்கிறார். கோடானகோடி ரசிகர்களுக்கு பேவரைட் கதாநாயகனாக கமல் சிறந்து விளங்கிக்கொண்டிருக்கிறார்.

 

அப்படித்தான் தான் தற்ப்போது அவரது தீவிர ரசிகர் ஒருவர் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வரும் 'அண்ணாத்த' பாடலுக்கு டிரெட்மில்  நின்று ஆடிய டான்ஸ் இணையத்தில் செம வைராகி பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறது. கமல் போன்றே கெட்டப் போட்டு அவரை போலவே டான்ஸ் ஆடி அனைவரையும் ஈர்த்துவிட்டார்.

இந்நிலையில் தற்ப்போது நடிகர் கமல் அந்த நபரை பாராட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் " நான் செய்த  நல்வினைகள் என் ரசிகரை சென்று அடைந்ததா எனும் சந்தேகம் எல்லாக் கலைஞர்களுக்கும் உண்டு. என் சிறு அசைவுகளைக் கூட கவனித்த அண்ணாத்த ஆடுறார். அது அப்பனுக்கு எவ்வளவு பெருமை? வாழ்க மகனே ! என்னைத் தலைமுறைகள் விஞ்சப் பார்த்து மகிழ்வதே என் கடமை, பெருமை! என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News