Categories: Cinema News latest news throwback stories

இனி ரஜினியுடன் இணைய வேண்டாம்.. கமல் முடிவுக்கு பின்னால் இப்படி ஒரு முடிவு இருக்கிறதாம்..!

Kamal vs Rajini: கமலும், ரஜினியும் ஒன்றாகவே வளர்ந்த காலக்கட்டம். இதில் கமல் சின்ன வயதில் இருந்தே ரசிகர்களிடம் பரிச்சயப்பட்ட முகம். ஆனால் ரஜினி அப்படி இல்லை. தட்டி தட்டி மேலே ஏறியவர். ஒரு கட்டத்தில் இருவரும் இணைய வேண்டாம் என்ற முடிவை கமல் எடுக்க வேறு ஒரு காரணமும் இருக்கிறதாம்.

கோலிவுட்டில் டாப்பில் இருக்கும் இரண்டு நாயகர்கள் இணைவது என்னவோ அரிதான விஷயம் தான். கமல் ரஜினிக்கு முன்னால் இருந்த சிவாஜி, எம்.ஜி.ஆர் ஒரே படத்தில் தான் இணைந்தனர். அதேப்போல விஜய் மற்றும் அஜித்தும் ஒரே படத்தில் தான் இணைந்து நடித்தனர். 

இதையும் படிங்க: SK 21 படத்திற்கு கறார் கண்டீசன் போட்ட ராஜ்கமல் பிலிம்ஸ்! இது என்னடா சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை?

ஆனால் இதற்கு நேர்மாறாக ரஜினியும், கமலும் கிட்டத்தட்ட 13 படங்களில் இணைந்து நடித்தனர். இந்த முடிவை கமல் தான் எடுத்தாராம். அதை ரஜினியிடம் தெரிவித்த போது அவரும் அதற்கு ஓகே சொல்லிவிட்டார். இது நமக்கு லாபம் இல்லை என்ற காரணத்தினை கூறினாராம்.

அந்த வகையில் இருவரும் இணைந்து நடித்த கடைசி படம் தில்லு முல்லு தான். ரஜினியின் அந்த படத்தில் கமல் கௌரவ வேடத்தில் நடித்து இருப்பார். ஆனால் கமல் சொன்ன காரணத்துக்கு முன்னால் அவருடைய சுயநலமும் இருக்கிறதாம். இது ஒரு படத்தில் இரு ஹீரோ நடிக்கும் போது இன்னொருவரின் புகழும் அடிப்படும்.

இதையும் படிங்க: ஹாஸ்பிடலில் நடந்த மெடிக்கல் மாஃபியா! ஒரு ட்ரையலுக்கு 25 லட்சமா? விக்ரமன் மனைவிக்கு நடந்த அநியாயம்

இந்த முடிவு ரஜினிக்கு பல இடங்களில் சாதகமாகவே இருந்தது. அதனால் அவர் உயர்ந்து கொண்டே இருந்தார். கமல் தன்னுடைய கேரியரை வேறுவிதமாக வடிவமைத்து கொண்டார். கமர்ஷியலுக்காக ஒரு படம் எடுப்பார். அதில் வரும் வருமானத்தினை தன்னுடைய லட்சயப்படங்களில் விட்டு விடுவார். இது அவருக்கு பாதகமாகவே அமைந்தது.

அபூர்வ ராகங்கள் பார்த்த ரஜினியை யாரும் சூப்பர்ஸ்டார் என நம்பி இருக்கவே மாட்டார்கள். கமல் மீது நெகட்டிவ் எண்ணம் இருந்த எல்லாரையும் அதிகமாக ஈர்த்தார் தான் ரஜினி. கமலுக்கு பெண் ரசிகைகள் ஜாஸ்தி என்றால் ஆண் ரசிகர்கள் அதிகம் ரஜினிக்கு தான். கமலும், ரஜினியும் அடிக்கடி இணைந்து நடித்து இருந்தால் இது நடந்து இருக்காதா என்னவோ?

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily