×

கமல்-பாரதிராஜா திடீர் சந்திப்பு: அடுத்த படத்தை இயக்குகிறாரா?

பாரதிராஜாவின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இதுவரை நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் , டிக் டிக் டிக் மற்றும் ஒரு கைதியின் டைரி ஆகிய திரைப்படங்கள் ஆகும்.
 

பாரதிராஜாவின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இதுவரை நான்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். 16 வயதினிலே, சிகப்பு ரோஜாக்கள் , டிக் டிக் டிக் மற்றும் ஒரு கைதியின் டைரி ஆகிய திரைப்படங்கள் ஆகும். இதில் ஒரு கைதியின் டைரி திரைப்படம் கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்திற்கு பின்னர் கடந்த 35 ஆண்டுகளாக அவர் பாரதிராஜாவின் இயக்கத்தில் படம் நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது பாரதிராஜா அவர்கள் கமல்ஹாசனை தனது மகன் மனோஜ் பாரதியுடன் சென்று சந்தித்துள்ளார். இந்த திடீர் சந்திப்பு மரியாதை நிமித்தம் ஆனது என்று கூறப்பட்டாலும் விரைவில் ஒரு திரைப்படத்தில் இருவரும் இணைய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது 

பாரதிராஜா விரைவில் இயக்க இருக்கும் தனது கனவு படம் ஒன்றில் கமல்ஹாசன் முக்கிய வேடத்தில் நடிப்பார் என்றும் இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் மனோஜ் பாரதியும் முக்கிய பங்காற்றுவார் எனத்தெரிகிறது இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் வரை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web

Trending Videos

Tamilnadu News