Categories: Cinema News latest news

தலீவரே இப்படியா வகையா சிக்குவீங்க… தக் லைஃப் படத்தின் போஸ்டரே காப்பி தான்..! கலாய்க்கும் நெட்டிசன்கள்

Thug life: கமல்ஹாசனுக்கு தற்போது நேரம் சரியில்லை போல. அவர் கால் வைக்கும் இடத்தில் எல்லாம் வழுக்குகிறது. இது ரியாலிட்டி ஷோவில் தொடங்கி நேற்று வெளியாகிய அவர் புது படத்தின் அறிவிப்பில் கூட சிக்கலை கொடுத்து இருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தன்னுடைய 234வது படத்தில் பிஸியாக நடித்து வந்தார். இப்படத்தினை ராஜ்கமல் ப்லிம்ஸ், மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸும் தயாரித்து வருகிறது. இப்படத்தின் பெயர் அறிவிப்பு நேற்று நடந்தது.

இதையும் வாசிங்க:ஒத்த வார்த்தைல ரஜினியை கடுப்பாக்கிய லாரன்ஸ்.. அதிகமா பேசினா இப்படித்தான் நடக்கும்!..

அதற்கு முன்னதாக இப்படத்தில் நடிக்கும் பிரபலங்களின் பெயர்கள் வரிசையாக அறிவிக்கப்பட்டது. ஜெய்லருக்கு பின்னர் வெளிமாநில நட்சத்திரங்கள் கோலிவுட்டில் அதிக படங்களில் நடிக்க தொடங்கி விட்டனர். அதன்படி இப்படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார்.

த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு தக் லைஃப் எனப் பெயர் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இண்ட்ரோ வீடியோவில் கமல் தன்னை ரங்கராய சக்திவேல் நாயகன் எனக் கூறி கொள்கிறார். கத்தி, கோடாரி, தீ பந்தம், அருவா போன்ற ஆயுதங்களை கொண்டு தன்னை அடிக்க வரும் 5 பேரை காலி செய்கிறார்.

இதையடுத்து தன்னை தாக்க வரும் காளையை பார்த்து இது முதல் முறை அல்ல… கடைசி முறையும் அல்ல என்பார். இதை பார்த்த ரசிகர்கள் முதலில் வாவ் தட்டினர். ஆனால் நேரம் போக போக இதை எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே என்ற நினைப்பில் ஆராய ஆஹா இதுவும் காப்பி தானா என கண்டுபிடித்து விட்டனர். அந்த வகையில் கமல்ஹாசனின் இந்த இண்ட்ரோ போஸ்டர் ஹாலிவுட் படத்தின் காப்பி எனக் கூறப்படுகிறது.

இதையும் வாசிங்க:ஆசையாக கேட்ட ரஜினியை காக்க வைத்த கமலின் ஆஸ்தான எழுத்தாளர்..! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா..?

2019ம் ஆண்டு ஹாலிவுட் நடிகர் மார்க் ஹாமில் கேரி பிஷ்ஷர் நடிப்பில் வெளியான ரைஸ் அஃப் ஸ்கைவாக்கர் படத்தில் இடம்பெற்ற காட்சியின் காப்பி என ஆதாரத்துடன் கலாய்த்து வருகின்றனர். மணிரத்னத்துக்கே இந்த நிலைமையா? இனிமே யோசிச்சு அடிங்க காப்பிலாம் எனவும் கூறி வருகின்றனர். 

நெட்டிசன்கள் பரப்பும் ஆதாரம்: https://twitter.com/tamiltalkies/status/1721753831590236430

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily