சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள கங்குவா படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் பெரிய தொகைக்கு கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று நடைபெற்ற அமேசான் நிறுவனத்தின் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்து கொண்டு கங்குவா டீசரை வெளியிட்டார்.
சூர்யா மட்டுமின்றி விஜய் தேவரகொண்டா, காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி, சமந்தா, கரண் ஜோஹர் உள்ளிட்ட பலர் அந்த விழாவில் கலந்து கொண்டனர். வரிசையாக பல படங்கள் மற்றும் வெப் தொடர்களின் அறிமுகத்தை அமேசான் நிறுவனம் வெளியிட்டது.
இதையும் படிங்க: நைட்டு ஃபுல்லா வேற படம்!.. பகலில் சின்னக்கவுண்டர்!.. விஜயகாந்த் எனர்ஜியை பார்த்து மிரண்டு போன பிரபலம்…
ஊர்ல மழையில்லை, வெயில் இல்லை, நல்ல படம் வரலை, ஆனால், உங்க கிட்ட மட்டும் எப்படி பாஸ் இவ்ளோ துட்டு இருக்கு என அமேசான் பிரைம் ஓனரை ரசிகர்கள் மீம் போட்டு கலாய்க்கும் அளவுக்கு ஏகப்பட்ட படங்களை அப்படியே அள்ளிப் போட்டுக் கொண்டு வந்திருக்கின்றனர்.
ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி உள்ள கேம் சேஞ்சர், காந்தாரா 2, ஃபேமிலி ஸ்டார், சமந்தாவின் சிட்டாடல் வெப்சீரிஸ், அனன்யா பாண்டேவின் கால் மீ பே என பல அறிவிப்புகளை வரிசையாக வெளியிட்டு ஓடிடி ரசிகர்களை அமேசான் பிரைம் நிறுவனம் திக்குமுக்காட செய்துள்ளது.
இதையும் படிங்க: ஏஞ்சலுக்கு றெக்க முதுகுலதான இருக்கும்!.. சமந்தாவுக்கு என்ன முன்னாடி இருக்குது?.. பறந்துட போகுது!..
ரசிகர்களின் ஃபேவரைட் வெப்சீரிஸான மிர்ஸாபூர் சீசன் 3ம் விரைவில் வருகிறது. பல ஆயிரம் கோடிக்கு இந்திய சினிமாவில் அமேசான் பிரைம் இன்வெஸ்ட்மென்ட் செய்திருக்கிறதே என அனைவரும் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். நெட்பிளிக்ஸ், டிஸ்னி ஹாட்ஸ்டார், ஜியோவுக்கு செம போட்டியை அமேசான் பிரைம் இந்த ஆண்டு வைத்திருக்கிறது.
Nayanthara: கடந்த…
TVK Vijay:…
TVK Vijay:…
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…