
Cinema News
Kanguva: கங்குவா டிக்கெட் எடுக்க போறீங்களா? ஒரு நிமிஷம் இத படிங்க… ஷாக் ஆகிடுவீங்க..
Kanguva: கங்குவா திரைப்படத்தின் உலகளாவிய வெளியீடு இன்று நடந்திருக்கிறது. ஆனால் பெரியளவு வசூல் குவிக்கும் என தயாரிப்பு நிறுவனம் சொன்னதற்கு பின்னால் முக்கிய காரணம் ஒன்று இருப்பதாக தகவல்கள் கசிந்து இருக்கிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா ஏறத்தாழ 3 வருடங்கள் கழித்து கோலிவுட்டில் ஒரு படத்தை வெளியிட்டு இருக்கிறார். பிரம்மாண்டமாக வரலாற்று கதைகள் உருவாகி இருக்கும் கங்குவார் திரைப்படத்தின் மீது ஸ்டூடியோ கிரீன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: Karthi: பாகுபலி காலகேயனே தோத்துருவார் போல.. ‘கங்குவா’ படத்தில் கார்த்தியின் கெட்டப் இதோ
இப்படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வட இந்தியிலும் பெரிய எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிடப்பட இருக்கிறது. இதனால் படத்தின் வசூல் ஆயிரம் கோடி இல்லாமல் 2000 கோடி வரை செல்லும் என பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பிரமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருந்தார்.
இதனால் படம் தமிழகத்தில் மிகப்பெரிய தொகையை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போதைய நிலவரப்படி கோட் மற்றும் அமரனின் முதல் நாள் புக் மை ஷோ டிக்கெட் விற்பனையை கூட இன்னும் கங்குவா திரைப்படம் நெருங்கவில்லை என கூறப்படுகிறது.
இதையும் படிங்க: Kanguva: கொஞ்சமா பண்ணீங்க!. ஓவர் கான்பிடன்ஸ் வச்ச ஆப்பு!. ஞானவேல் ராஜாவை பழிதீர்த்த எஸ்.கே!…
ஃப்ரீ புக்கிங் கோட் மற்றும் அமரன் திரைப்படம் 20 ஆயிரம் டிக்கெட்களை முதல் நாளில் கடந்தது. ஆனால் கங்குவா தற்போது வரை 16 ஆயிரம் கோடி டிக்கெட் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருக்கிறது. பல முக்கிய திரையரங்குகள் முதல் நாள் காட்சிகள் மட்டுமே தொடங்கப்பட்டிருக்கிறது.
பி வி ஆர் மற்றும் ஐநாக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை 450 வரை விதிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், முதல் வரிசையில் இருக்கும் டிக்கெட் கங்குவாவிற்கு எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக அந்த வரிசை டிக்கெட்களின் விலை 60 மட்டுமே இருக்கும்.

Kanguva
ஆனால் தற்போது கங்குவாவிற்கு மற்ற படங்களை விட ஒன்றிலிருந்து இரண்டு மடங்கு அதிகமாக விலையை நிர்ணயம் செய்து வைத்திருக்கின்றனர். இதனால்தான் 2 ஆயிரம் கோடி வசூல் செய்யும் என வசனம் பேசினீர்களா என கேள்வியும் எழுந்து வருகிறது.