Categories: Cinema News latest news

சிவகுமாரை இழுத்து சந்தி சிரிக்க வைத்த பிரபல இயக்குநர்!.. எல்லாத்துக்கும் ஞானவேல் தான் காரணம்!..

இயக்குநர் அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் இடையே கடந்த 16 ஆண்டுகளாக மிகப்பெரிய பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது. ஆனால், அது அமைதியாக உள்ளுக்குள்ளே நெருப்பாக கொளுந்து விட்டு எரிந்து வந்த நிலையில், நடிகர் கார்த்தியின் 25வது படமான ஜப்பான் படம் ரிலீஸை முன்னிட்டு வெடித்த சர்ச்சை இருவரும் மாற்றி மாற்றி யூடியூப்களில் பேட்டிக் கொடுக்க பூதாகரமாக வெடித்து வருகிறது.

இயக்குநர் அமீர் ஒரு திருடன் என்றும் தனது பணத்தில் தான் சினிமாவே கற்றுக் கொண்டார் என ஞானவேல்ராஜா பேசியதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மெளனம் பேசியதே, ராம் உள்ளிட்ட படங்களை இயக்கிய பின்னர் தான் பருத்திவீரன் படத்தை அமீர் இயக்கினார்.

இதையும் படிங்க: அச்சச்சோ!.. யாஷிகா ஆனந்த்தை தொடர்ந்து ஜி.பி. முத்து காரும் விபத்துல சிக்கிடுச்சாம்.. என்ன ஆச்சு?

ஞானவேல் ராஜா அமீர் தனது பணத்தை திருடி ஏமாற்றி விட்டார் என பேசியதற்கு சசிகுமார், சமுத்திரகனி மற்றும் இயக்குநர் இமயம் பாரதிராஜா என பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் கரு. பழனியப்பன் தனது கண்டனத்தை இன்று தெரிவித்துள்ளார். அவர் அமீருக்கும் ஞானவேல் ராஜாவுக்கும் தொழில் ரீதியாக என்ன பிரச்சனை வேண்டுமானால் இருக்கட்டும். ஆனால், ஒரு இயக்குநரை திருடன் என எப்படி சொல்லலாம் என்கிற கேள்வியை எழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: உன்கூட இருக்க ஒருத்தனையும் நம்பாதே!. கழுத்த அறுத்துருவானுங்க!. எம்ஜிஆரை எச்சரித்த எம்.ஆர்.ராதா

இயக்குநர் அமீர் சினிமாவில் பல சங்கங்களின் தலைவராகவும், செயலாளராகவும் பணியாற்றி இருக்கிறார். ஒருவேளை கூட எந்த சங்கத்தில் இருந்தும் காசு எடுத்து சாப்பிட்டதில்லை அதை நான் கூடவே இருந்து பார்த்துள்ளேன் என கரு. பழனியப்பன் கூறியுள்ளார்.

மேலும், பல நூறு திருக்குறளை சொல்லும் நடிகர் சிவகுமார் ஏன் இந்த விவகாரத்தை பேசி தீர்த்து ஒரு முடிவுக்கு இத்தனை ஆண்டு காலத்தில் கொண்டு வராமல் விட்டு விட்டார் என்றும் கார்த்தி, சூர்யாவின் கள்ள மெளனம் ஏன்? என்றும்

Saranya M
Published by
Saranya M