Categories: latest news

ரஜினி கமலேயே வாடா போடான்னு பேசிய கவுண்டமணி!.. இந்த நடிகரை மட்டும் அப்படி பேச மாட்டார்!..

கவுண்டமணி இந்த நடிகருக்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பார்..!!

தமிழ் சினிமால காமெடி நடிகர்னா நமக்கெல்லாம் ஞாபகத்துக்கு வருவது கவுண்டமணி செந்தில் மற்றும் வடிவேலு இதுல குறிப்பா கவுண்டமணி செந்தில் காமெடி அனைவருக்கும் இன்றளவிலும் மிகவும் வரவேற்பு மக்களிடையே பெற்றுள்ளது. இந்த நிலையில் நடிகர் கவுண்டமணி நிறைய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார். குறிப்பாக ரஜினி, கமல், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களையும் வாடா போடான்னு அசால்ட் ஆக கூப்பிடுவாரு அந்த அளவிற்கு எல்லா நடிகர்களுடன் சகஜமா பழகுவார்.

Rajini

இந்த நிலையில் ரஜினி மற்றும் கமல் அந்த நேரத்தில் பெரிய நடிகர்களாக இல்லாத நிலையில் கவுண்டமணி அவர்களை வாடா போடா என்று அழைத்து வந்தார். பிறகு நாட்கள் செல்ல செல்ல ரஜினி மற்றும் கமல் இருவரும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்தார்கள். இதனை அடுத்து கவுண்டமணி அவர்கள் அவர்களை மீண்டும் வாடா போடா என்று அழைத்திருக்கிறார். இதனை கண்ட இருவரும் இனிமேல் கவுண்டமணி என்னுடைய படத்தில் நடிக்க வேண்டாம்.அப்படி அவர் நடித்தாலும் அவருக்கென்றே தனி ட்ராக் வையுங்கள் என்று இயக்குனருடன் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையும் படிங்க- என்னத்த பானையை உருட்டினாலும் ஷேப்புக்கு வரமாட்டுங்குது! ஓரங்கட்டப்படுவாரா VP? தளபதி 68ல் என்னதான் பிரச்சினை?

Goundamani

இதனை அடுத்து கவுண்டமணி எந்த ஒரு படத்திலும் ரஜினி மற்றும் கமலுடன் அதற்குப் பிறகு நடிக்கவே இல்லை. அதற்குப் பிறகுதான் கவுண்டமணி செந்தில் காமினேஷன் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை அடுத்து இவர்கள் நடிக்கும் அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

Rajini

இந்த நிலையில் மன்னன் திரைப்படத்தில் நடிகர் ரஜினியுடன் நடிக்க கவுண்டமணிக்கு அழைப்பு வந்தது. அதற்கு கவுண்டமணி நான் நடிக்க தயார் ஆனால் ரஜினி வாடா போடா அப்படின்னு கூப்பிட வேண்டாம்னு சொல்லிட்டாரே எப்படி நடிக்க முடியும் அப்படின்னு இயக்குனரை கேள்வி எழுப்பி இருக்கிறார்.பிறகு இருவரும் சமாதானம் ஆகி அந்த படத்தில் கவுண்டமணி எப்பொழுதும் போல ரஜினியை வாடா போடா என்றே அழைத்து வந்தார்.இந்த படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

Vijaykanth

இந்த நிலையில் எல்லா நடிகர்களையும் வாடா போடா என்று கூப்பிடும் கவுண்டமணி நடிகர் விஜய் காந்தை மட்டும் எப்பொழுதும் மரியாதை கொடுத்தே பேசுவார். அதற்கு காரணம் விஜயகாந்த் மீது அவர் வைத்த மதிப்பும் மரியாதையும் ஆகும். அவர் எப்பொழுதும் விஜயகாந்தை திரைப்படங்களிலும் கூட மரியாதை கொடுத்து பேசுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க-துப்பாக்கி காட்டி ஷங்கரை மிரட்டிய தயாரிப்பாளர்.. பரிதாப நிலைக்குபோய் அவரிடமே வாய்ப்பு கேட்ட சோகம்..

prakash kumar
Published by
prakash kumar