Categories: Cinema News latest news

ஒரே ஒரு வீடியோ தான்!.. திடீரென சோஷியல் மீடியாவில் டிரெண்டான கவின்.. அதுதான் விஷயமா?..

இளன் இயக்கத்தில் கவின் நடித்து வரும் புதிய படத்திற்கு ஸ்டார் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக இந்தியில் வெளியான ஆபாச வெப் தொடரான ஷீ வெப்சீரிஸில் நடித்த அதிதி போஹங்கர் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அதிதி போஹங்கரின் கதாபாத்திர பெயர் ஜிமிக்கி என கடற்கரையில் சுடிதார் உடையை முழுக்க போர்த்திக் கொண்டு அவர் சிரிக்கும் காட்சி வீடியோ ஒன்றை திடீரென படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: அன்னபூரணியை தொடர்ந்து சர்ச்சையை கிளப்பிய அனிமல்!.. இதுல இருந்து ஒண்ணு மட்டும் நல்லா தெரியுது!..

அந்த வீடியோ வெளியானதும் அதிதி போஹங்கர் டிரெண்டாகவில்லை. அவருக்கு பதில், #Kavin ஹாஷ்டேக்கை போட்டு கவின் ரசிகர்கள் சோஷியல் மீடியாவை ஆட்கொண்டு விட்டனர்.

சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையனாக கவின் நடிக்கும் போதே அவருக்கு ரசிகைகள் ஜாஸ்தி. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெட்டியுடன் கவின் வெளியேறிய நிலையில், அவருக்கும் அந்த சீசனில் போட்டியாளராக பங்கேற்ற லாஸ்லியாவுக்கும் இடையே ஏற்பட்ட காதல் மற்றும் பிரிவு என ஏகப்பட்ட ரசிகர்கள் கவினுக்கு சேர்ந்தனர்.

இதையும் படிங்க: கேபிஒய் பாலா ஒரு பொண்ணோட கையை புடிச்சு காட்டுறாரே!.. அதுல என்ன இருக்குன்னு பாருங்க.. ஒரே ஷாக்!..

பிக் பாஸுக்கு பிறகு கவின் நடித்த லிப்ட் திரைப்படம் வெற்றிப் பெற்ற நிலையில், கடந்த ஆண்டு வெளியான டாடா திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அடுத்து இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் கவின் நடித்து வரும் நிலையில், அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அதிதி போஹங்கர் நடிக்கிறார் என்றும் அவரது கதாபாத்திர வீடியோவை படக்குழு வெளியிட்ட நிலையில், கவின் ஆர்மியினர் ஆஜராகி அவரை டிரெண்டிங்கில் கொண்டு வந்துள்ளனர்.

 

Saranya M
Published by
Saranya M